பவர்ப்ளேயில் எகிறிய மும்பை.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சங்கர் - சன்ரைசர்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

7-வது ஓவரை வீச விஜய் சங்கரை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து குவிண்டன் டி காக், ரோஹித் ஷர்மா மும்பை இன்னிங்ஸை தொடங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கினார் டி காக். பவர் ப்ளே ஓவர்களில் ரோஹித், டி காக் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 6 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்தது.

  இதனையடுத்து 7-வது ஓவரை வீச விஜய் சங்கரை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. விஜய் வீசிய 3-வது பந்தில் ரோஹித் ஷர்மா, விராட் சிங் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோஹித் ஷர்மா 32 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். டிகாக், சூர்யகுமார் இருவரும் பவுண்டரி சிக்ஸர்களை விளாசினர். மீண்டும் தனது இரண்டாவது ஓவரை வீச விஜய் சங்கர் வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சூர்ய குமார் யாதவ் ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். விஜய் சங்கர் ஸ்லோவாக வீசிய அடுத்த பந்தை லெக் ஸைடு அடிக்க முயன்ற சூர்ய குமார் யாதவ், விஜய் வசமே சிக்கினார். 10 ரன்களுடன் சூர்ய குமார் யாதவ் வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார்.

  தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குவிண்டன் டி காக், முஜிபுர் ரஹ்மான். பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டி காக் 40 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பொல்லார்ட் களமிறங்கினார். இதற்கிடையில் இஷான் கிஷன் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.ஓவர்கள் குறைவாக இருந்ததால் ஹர்திக் வந்ததில் இருந்தே அதிரடியாகவே விளையாடினார். புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா ரன் அவுட்டில் இருந்து தப்பினார். 19-வது ஓவரை கலீல் வீசினார் இந்த ஓவரில் பொல்லார்ட் கொடுத்த கேட்சை விஜய் சங்கர் வீணடித்தார். ஆனால் இவரது அடுத்த சில பந்துகளில் ஹர்திக் பாண்டியா வெளியேறினார். இதனையடுத்து க்ருணால் பாண்ட்யா களமிறங்கினார்.  கடைசி ஓவரில் பொல்லார்ட் இரண்டு சிக்ஸர்களை விளாச மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
  Published by:Ramprasath H
  First published: