• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: கடந்த சீசனில் ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்- இன்று நெட்பவுலரான கொடுமை

IPL 2021: கடந்த சீசனில் ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்- இன்று நெட்பவுலரான கொடுமை

சல்யூட் புகழ் ஷெல்டன் காட்ரெல் பரிதாபம்

சல்யூட் புகழ் ஷெல்டன் காட்ரெல் பரிதாபம்

ஐபிஎல் கிரிக்கெட்டும் ஒருவிதமான லாட்டரிதான் நம்பர் விழுந்தால் லக்கி பிரைஸ் இல்லையேல் அம்போதான். அது போல்தான் இங்கும் பெரிய தொகைக்கான காசோலையைப் பெற்ற வீரர்கள் சிலர் ஒன்றுமில்லாமல் போனதும் நடந்துள்ளது.

  • Share this:
ஐபிஎல் கிரிக்கெட்டும் ஒருவிதமான லாட்டரிதான் நம்பர் விழுந்தால் லக்கி பிரைஸ் இல்லையேல் அம்போதான். அது போல்தான் இங்கும் பெரிய தொகைக்கான காசோலையைப் பெற்ற வீரர்கள் சிலர் ஒன்றுமில்லாமல் போனதும் நடந்துள்ளது.

ஐபிஎல் ஒரு நிலப்பிரபுத்துவ, ஜமீந்தாரி அமைப்பு போன்றது, பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடும் இல்லையெனில் கீழே போட்டு நசுக்கும். வெஸ்ட் இண்டீஸ் இடது கை வேகப்பந்து வீச்சாளர், சல்யூட் புகழ் ஷெல்டன் காட்ரெல் நிலை பரிதாபத்துக்குரியது. கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஷெல்டன் காட்ரெல் அதன் பிறகு ஆட்டத்தில் சொதப்ப பஞ்சாப் அணி அவரை கழற்றி விட, அடுத்ததாக இவரை எடுக்க ஆளில்லை.

கடைசியாக இவர் ஆடிய போட்டியில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் திவேத்தியா ஷெல்டன் காட்ரெலை ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசினார், அதன் பிறகு வாய்ப்பளிக்கப்படவில்லை, ஒரு போட்டியில் ஒருவர் இப்படி அடிக்கலாம் அதற்காக ஒரு சீசன் முழுதும் அவரை உட்காரவைத்து இப்போது நெட்பவுலராக்கியிருப்பது கொடுமையிலும் கொடுமை.

இதனையடுத்து ஐபிஎல் 2021-ல் தன்னை எடுக்க ஆளில்லாத நிலையில் ஷெல்டன் காட்ரெல் யுஏஇ-யில் விளையாடும் மீதிப்போட்டிகளில் நெட்பவுலராக ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். டோமினிக் ட்ரேக்ஸ், பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால் போன்ற தங்கள் காலத்தில் அபாரமாக மே.இ.தீவுகளுக்காக வீசிய வீரர்கள், கரீபியன் பிரீமியர் லீகில் நன்றாக ஆடக்கூடியவர்கள் இன்று ஐபிஎல் 2021-ல் நெட் பவுலர்கள்! இதை என்னவென்று சொல்வது? இப்போது பிடல் எட்வர்ட்ஸ் வந்து போட்டாலும் கோலியோ, ராகுலோ தாங்குவார்களா என்பது சந்தேகமே ஆனால் ஐபிஎல் தொடரில் இவர்களுக்கு இந்த நெட்பவுலிங் நிலைமை.

இதில் ரவி ராம்பால் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்த உலக்கோப்பை டி20 அணியில் இடம்பெற்றிருப்பவர் என்பதுதான் இதில் புரியாத புதிராக உள்ளது. இவர் போய் ஏன்நெட்பவுலராக ஒத்துக் கொள்ள வேண்டும். பாவம் வெஸ்ட் இண்டீச், கரீபியன் பிரீமியர் லீக் சம்பளங்களை விட நெட்பவுலர் தொகை ஐபிஎல்-ல் அதிகம் போலும்! கரீபியன் பிரீமியர் லீகில் பெரிய பார்மில் இருக்கும் ரவி ராம்பால் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 14 என்ற சராசரியில் எடுத்துள்ளார். சிக்கன விகிதமும் 7.26 தான்.

இதே ரவி ராம்பால் ஐபிஎல் 2013 மற்றும் 2014ம் ஆண்டு தொடர்களில் ஆர்சிபி அணிக்கு ஆடி 12 ஆட்டங்கள்ல் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். தன் காலத்தில் அதிவேக பவுலரான பிடல் எட்வர்ட்ஸ் மார்ச்சில் இலங்கைக்கு எதிராக ஆட மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார். கரீபியன் பிரிமியர் லீகில் இவர் ஜமைக்கா தலவாஸ் அணிக்கு ஆடுகிறார். இதில் 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவரும் 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ஏலம் எடுக்கப்பட்டவர்தான்.

இந்தப் பின்னணியில் ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷெல்டன் காட்ரெல் இப்போது நெட் பவுலர் என்றால் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் அவர் சல்யூட் செய்வதன் உளவியல் பின்னணியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: