• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021| சரியான தூங்கு மூஞ்சி டீம்: சேவாக்; கோலியின் கிண்டல் புரியலையா பஞ்சாப்?- ஐபிஎல் துளிகள்

IPL 2021| சரியான தூங்கு மூஞ்சி டீம்: சேவாக்; கோலியின் கிண்டல் புரியலையா பஞ்சாப்?- ஐபிஎல் துளிகள்

சேவாக்

சேவாக்

ஐபிஎல் 2021 போட்டிகள் பிளே ஆஃப் உச்சத்துக்கு முந்தைய நிலையில் உள்ளது, இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தவிர மற்ற அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை ஓரளவுக்குத் தக்க வைத்துள்ளன.

  • Share this:
    அன்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி மிகவும் சோர்ந்து போய் 115 ரன்களை மட்டுமே எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. விரட்டலில் ஷுப்மன் கில் வெளுத்து வாங்க கொல்கத்தா எளிதில் வென்றது. இந்தப் போட்டி குறித்து சேவாக் கடும் கிண்டலுடன் தன் கருத்தை தெரிவித்துள்ளார். சேவாக் ட்விட்டரிலும் சரி தனியார் நிகழ்ச்சிகளிலும் ஐபிஎல் போட்டிகள் பற்றி கருத்துகளை வெளியிடும்போது மிகவும் நக்கலாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணி பற்றி அவர் கூறியதாவது: “ஹைதராபாத் அணி சஹா மற்றும் ஜேசன் ராயுடன் தொடங்கினர், ஆனால் இருவருமே அடுத்து ஆட்டமிழந்து பெவிலியின் திரும்பினர். அதன் பிறகு வில்லியம்சன், பிரியம் கார்க் கொஞ்சம் நகர்த்தினர். மற்ற வீரர்கள் தூங்குமூஞ்சிகள் போல் ஆடினர். கடைசி 4 ஓவர்கள் நான் தூங்கியே விட்டேன் பிறகு விழித்துப் பார்த்தால் ஹைதராபாத் வெறும் 115/8 என்று முடிந்திருந்தது” என்று செம கிண்டல் செய்துள்ளார்.

    புவனேஷ்வர் குமார் குறித்து மஞ்சுரேக்கர்:

    புவனேஷ்வர் குமார் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவரது தற்போதைய உடல் தகுதி நிலவரம் சரியாக இல்லை என்கிறார் சஞ்சை மஞ்சுரேக்கர்.

    வெற்றி நாயகர்கள் தீபக் சாகர்- புவனேஷ்வர் குமார்


    “இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டுத் தொடரில் புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்குள் வந்து பவுலிங் செய்த போது பழைய பார்மை மீட்டு விட்டேன் என்று உறுதியளிப்பதாக அமைந்தது. ஆனால் பிறகு இலங்கையில் அவர் 100% உடல்தகுதியுடன் இல்லை என்று தெரிந்தது. இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அவர் முழு உடல்தகுதியுடன் ஆடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அவரது வேகமும் கொஞ்சம் குறைந்து விட்டது” என்றார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

    பஞ்சாப் கிங்ஸ் அணியை கிண்டல் செய்த விராட் கோலி:

    அன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது, கோலிக்கு 2 கேட்ச் டிராப், படிக்கலுக்கு தேர்ட் அம்பயர் தெளிவான அவுட்டுக்கு நாட் அவுட் கொடுத்தது பிறகு விரட்டலில் கிங்ஸ் பஞ்சாப் 91/0 என்ற நிலையிலிருந்து போட்டியை தோற்றது என்று அந்தப் போட்டி கடும் ஐயங்களை எழுப்பியது, ஆனால் கோலிக்கு அது ஆர்சிபி அணியை பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்ய உதவியது.

    பிளே ஆப் சுற்றில் விராட் கோலி படை ஆர்சிபி.


    இந்நிலையில், இந்தியாவில் ஐபிஎல் 2021 முதல் சுற்று போட்டிகள் நடைபெற்ற போது ஆர்சிபியை வீழ்த்திய பஞ்சாப் அணி அப்போது தன் சமூக வலைத்தளத்தில் ஆர்சிபியைக் கிண்டலடித்து சாந்தி சாந்தி சாந்திஹி என்று கேப்ஷன் போட்டது. இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுக்க ட்வீட்டை நீக்கியது பஞ்சாப் கிங்ஸ், ஆனால் கோலி அதை மறக்கவில்லை இந்த முறை வென்றவுடன் கோலி மறக்காமல் அதற்கு திருப்பிக் கொடுக்கும் விதமாக ‘பஹூத் சாந்தி ஹை’ என்று கூறியது யாருக்கு புரியுதோ இல்லையோ பஞ்சாப் கிங்ஸ் உங்களுக்குக் கூட புரியலையா என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: