இந்தியாவுக்கு உணர்ச்சிவசத்துடன் பிரியாவிடை: நியூசிலாந்து கிரிக்கெட் வர்ணணையாளர் உருக்கம்!

சைமன் டவுல்

ஐபிஎல் 2021-ன் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தையும், பயோ-பபுள் பாதுகாப்பையும் மீறி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

  • Share this:
இந்த இக்கட்டான  நேரத்தில் உங்களை விட்டு பிரிவதில் வருத்தம் அடைகிறேன் என்று உணர்ச்சிவசத்துடன் இந்தியாவிலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றிருக்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணணையாளர் ஒருவர்,

இந்தியாவில் 2வது அலை பரவல் காரணமாக கொரோனா நோய்த்தொற்று வீரியமுடன் பரவி வரும் நிலையில் பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் வைக்கப்பட்டு குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடரை பிசிசிஐ ரத்து செய்தது. இதனையடுத்து இதில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டு வீரர்கள், வர்னணையாளர், அம்பயர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் ஐபிஎல் வர்ணணையாளருமான சைமன் டவுல் கடந்த புதனன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் முன் இந்தியர்கள் மீதான தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அன்புள்ள இந்தியா, நீங்கள் பல ஆண்டுகளாக எனக்கு எவ்வளவோ அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள், இதுபோன்ற கடினமான காலங்களில் உங்களை விட்டு வெளியேறியதற்கு வருந்துகிறேன்.

 இங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் என் இதயம் உள்ளது. பாதுகாப்பாக இருப்பதற்கும் என்ன செய்ய முடியுமோ அதனை செய்திடுங்கள். அடுத்த முறை வரை கவனித்துக் கொள்ளுங்கள்” என சைமன் டவுல் உருக்கமுடன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021-ன் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தையும், பயோ-பபுள் பாதுகாப்பையும் மீறி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
குறைந்தது 4 ஐபிஎல் அணிகள் கொரோனாவால் பாதிப்படைந்தன. சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்திகள் எழுந்தன.

டெல்லி கேப்பிடல்ஸ் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த அணி கடும் தனிமைப்படுத்தலுக்குச் சென்றுள்ளது, கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ், ஆனால் இவர்கள் பணியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ். முன்னதாக தன் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அஸ்வினும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து பாதியில் விலகினார்.

இப்படி அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: