Shoaib Akhtar | 2008-லிருந்து இவர்கள் சம்பாதிக்காததா? ஓர் ஆண்டு சம்பாதிக்கா விட்டால் குடியா மூழ்கி விடும்: ஐபிஎல் குறித்து ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

ஐபிஎல் கிரிக்கெட்டை காலவரையின்றி ஒத்தி வைத்த பிசிசிஐ முடிவை ஆதரிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ், ஷோயப் அகதர் ஒரு ஆண்டு சம்பாதிக்காவிட்டால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொரோனா அணி வீரர்களைத் தொற்றியது. பயிற்சியாளர்கள் பாலாஜி, மைக் ஹஸ்ஸியைத் தொற்றியுள்ளது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா என்று வரிசையாகக் கொரோனா தொற்ற பயந்து போன பிசிசிஐ ஐபிஎல் 2021 தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்தது.

    இது தொடர்பாக பாராட்டுதலாக நிறைய கருத்துகளும், வருத்தமாக நிறைய கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் உலகின் பணமழை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானது பற்றி ஷோயப் அக்தர் தன் யூடியூப் சேனலில் பேசும்போது கூறியதாவது:

    இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரை நிறுத்த வேண்டும் என்று நான் கூறிய போது அதன் பின்னணியில் உணர்வு இருந்ததே காரணம். இந்தியாவில் ஒரு தேசியப் பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு 4 லட்சம் பேரை கொரோனா தொற்றுகிறது என்றால் அது சாதாரணமல்ல.

    இது போன்ற தருணங்களில் ஐபிஎல் எப்படி நடத்த முடியும்? ஆடம்பரமும் ஷோவும் நடத்த முடியாதது.

    பணம் சம்பாதிக்க முடியாததால் ஒன்றும் பிரச்னையில்லை. 2008 முதல் சம்பாதித்து கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு வருடம் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் குடியா மூழ்கி விடும்? பிரச்னை என்ன? மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தேசியப் பேரழிவு, ஒரு அண்டை நாட்டு மனிதனாக ஐபிஎல் நிறுத்தப் படவேண்டும் என்று முறையிட்டேன்.

    ஐபிஎல் தொடரை நடத்த முடியாது, பயோ-பபுள் பாதுகாப்பு கிடையாது, குறிப்பாக அணி உரிமையாளர்கள் நடத்தும் இத்தகைய கிரிக்கெட்டில் சாத்தியமில்லை. நாங்களும்தான் பாகிஸ்தான் சூப்பர் லீகில் பயோ பபுள் உருவாக்கினோம் ஆனால் அது படுமோசமான தோல்வியடைந்து பாதியிலேயே தொடர் நிறுத்தப்பட்டது. இந்தியாவிலும் தோல்வி அடைந்தது.

    விடுதிகளில் வேலைப்பார்ப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பயோ-பபுளுக்குள் இவர்கள் இருக்க மாட்டார்கள். சர்வதேச கிரிக்கெட்டை பயோ-பபுள் உதவியுடன் நடத்தலாம், ஆனால் தனியார் கிரிக்கெட்டை நடத்த முடியாது. ஏனெனில் இதில் அணிகள், வீரர்கள் அதிகம். உலகமே அங்கு உள்ளது. ஐபிஎல் சிறிய நிகழ்வு கிடையாது.

    இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.
    Published by:Muthukumar
    First published: