IPL 2021: ஐபிஎல் 2021 போட்டிகள் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15-ல் முடிவடைகிறது

ஐபிஎல் கோப்பை

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளை நடத்த முடிவெடுத்த பின் போட்டிகளை செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    துபாய், ஷார்ஜா, அபுதாபியில் போட்டிகளை நடத்துவதற்கான யுஏஇயுடனான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 25 நாட்களில் ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதே போல் வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்குரிய பேச்சுவார்த்தைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. அப்படி அவர்களால் வர முடியவில்லை எனில் மாற்று ஏற்பாடுகளுக்கு யோசிக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தி ஏஜென்சிக்குத் தெரிவித்துள்ளார்.

    Also Read: Euro Cup 2021| Ronaldo: ரொனால்டோ சாதனைக்கு 6 கோல்கள் பாக்கி; கால்பந்து தொடரில் கவனிக்க வேண்டிய நட்சத்திரங்கள்

    பிசிசிஐ அதிகாரிகள் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் பேசி இதற்கு ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே இது தொடர்பாக பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆஷ்லி ஜைல்ஸ் ஏற்கெனவே தங்கள் நாட்டு வீரர்களை இதில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். ஏனெனில் ஆஷஸ் தொடர் தயாரிப்பு இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    Also Read: Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

    பிசிசிஐ வெறும் சுயநல நோக்கோடு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஐபிஎல் தொடரை விடாப்பிடியாக நடத்துவதாக ஏற்கெனவே சில தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐபிஎல் போட்டிகளை முடிக்காவிட்டால் பிசிசிஐக்கு சுமார் ரூ.2000 கோடி இழப்பு ஏற்படும் என்று கங்குலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ளன, நடந்து முடிந்த வரையில் ரிஷப் பந்த் கேப்டன்சி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்திலும் தோனி தலைமை சிஎஸ்கே 2ம் இடத்திலும் உள்ளது.
    Published by:Muthukumar
    First published: