ஐபிஎல் 2021 : டாஸ் போட்ட பின் காயினை பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்ட சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2021 : டாஸ் போட்ட பின் காயினை பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்ட சஞ்சு சாம்சன்

டாஸை எடுத்து வைத்து கொண்ட சஞ்சு சாம்சன்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போட்ட பின் அந்த காயினை சஞ்சு சாம்சன் எடுத்து வைத்துக் கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

 • Share this:
  ஐ.பி.எல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் அனைவரது இதய துடிப்பை எகிற வைக்கும் விதமாக இறுதி ஓவர்கள் இருந்தது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் பதைபதைக்க வைத்தது. பஞ்சாப் அணி போட்டி என்றாலே எதிர்பார்ப்பு எகிறி அடிக்கும் என்பதற்கு முதல் போட்டியே சான்றாக அமைந்தது.

  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனியாளாக சதம் விளாசி கடைசி வரை வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி பந்தில் அவர் தூக்கி அடித்த பந்து பவுண்ரி எல்லையில் கேட்ச் ஆனதால் அவரது கனவு தகர்ந்தது. இருந்தாலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பலரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

  இதனிடையே இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் டாஸின் போது ருசிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. டாஸ் போட்டு முடிந்த பின் சஞ்சு சாம்சன் அந்த காயினை எடுத்து தனது பாக்கெட்க்குள் வைத்து கொண்டார். ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன் கேப்டனாக ராஜஸ்தானை வழிநடத்தும் முதல் போட்டி என்பதால், இந்தப் போட்டியின் சினைவு சின்னமாக காயினை சஞ்சு எடுத்துக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத நடுவர் சற்று குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேற்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 119 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் அவர் பவுண்டரி எல்லைக்கு தூக்கி அடிக்கப்பட்ட பந்து கேட்ச் பிடிக்கப்பட்டதால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  Published by:Vijay R
  First published: