• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே சாதனையாளர் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே சாதனையாளர் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்.

ருதுராஜ் கெய்க்வாட்.

ஐபிஎல் தொடர்களில் ஒரே சீசனில் 600 ரன்களுக்கும் மேல் விளாசிய 3வது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.

  • Share this:
    4வது ஐபிஎல் கோப்பையை நோக்கி சிஎஸ்கே முன்னேறியுள்ளது, கோப்பையை வென்று விடுவார்கள், அதற்கான விஷயதாரங்கள்தான் நடந்து வருகின்றன. நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 70 ரன்களை விளாசி ருதுராஜ் அதில் 5 பவுண்டரி ஒரு சிக்சரையும் அடித்து ஆட்டமிழந்தார், அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்தினார்.

    இந்த 70 ரன்களினால் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஐபில் தொடரில் 600 ரன்களைக் கடந்தார். பஞ்சாப் கிங்ஸ் கிங் கே.எல். ராகுலுக்கு அடுத்த படியாக ருதுராஜ் 600 ரன்கள் மைல்கல்லை 2021 ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளார். 2013 ஐபிஎல் தொடரில் மைக் ஹஸ்ஸி 733 ரன்களை எடுத்தார். 2018 சீசனில் அம்பதி ராயுடு 602 ரன்கள் விளாசினார், ஆனால் பாவம் 2019 உலகக்கோப்பையில் புறக்கணிக்கப்பட்டார்.

    கே.எல்.ராகுல் இப்போது 626 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார், இவரை நிச்சயம் ருதுராஜ் இதை உடைத்து விடுவார். கெய்க்வாட் 603 ரன்கள். இந்த ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் 551 ரன்கள் என்று இருக்கிறார். ஃபாப் டுபிளெசிஸ் 547 ரன்கள் எடுத்து 4ம் இடத்தில் இருக்கிறார். கிளென் மேக்ஸ்வெல் 498 ரன்கள் எடுத்துள்ளார்.

    டெல்லி அணிக்கு வாய்ப்பு முற்றிலும் போய் விடவில்லை ஆர்சிபி, கொல்கத்தா போட்டியில் வென்ற அணியை வீழ்த்தினால் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ், சிஎஸ்கே பைனலில் பார்க்கலாம், ஆனால் கோலியா தோனியா என்று பார்க்க ஏற்கெனவே ஐபிஎல் தீர்மானமாகி விட்டது. ஏனெனில் தோனி இந்திய அணியின் மெண்ட்டாராக நியமிக்கப்பட்டுள்ளார், கோலி இந்திய அணியின் டி20 கேப்டன். இந்த சேர்க்கை வெற்றிக்கூட்டணி என்பதைக் காட்ட இரு அணிகளும் இறுதியில் மோதினால்தானே நல்லது.

    ருதுராஜ் பற்றி தோனி கூறியது: ‘கேரக்டர்’ இல்லாமல் இப்படி மீண்டு வந்திருக்க முடியாது

    ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் என்ற ஒரு பேட்ஸ்மென், முறையான கிரிக்கெட் ஷாட்களையே ஆடுகிறார், அதில் ஆக்ரோஷம் காட்டுகிறார், இவர் ஒரு சிறந்த டெஸ்ட் வீர்ராக வரக்கூட வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது. இவரிடம் மொகமட் கயீப், ராகுல் திராவிட் கலவை இருப்பதாக அவரது பேட்டிங்கிலிருந்து தெரிகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: