அதிரடியை ஆரம்பித்த மேக்ஸ்வெல்.. கச்சிதமாக முடித்த டிவில்லியர்ஸ்.. சேப்பாக்கத்தில் ரன் மழை - கே.கே.ஆர்-க்கு 205 ரன்கள் இலக்கு

அதிரடியை ஆரம்பித்த மேக்ஸ்வெல்.. கச்சிதமாக முடித்த டிவில்லியர்ஸ்.. சேப்பாக்கத்தில் ரன் மழை - கே.கே.ஆர்-க்கு 205 ரன்கள் இலக்கு

மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்

ஆஃப் சைடு.. லெக் சைடு..ரிவர்ஸ் ஸ்வீப் என தனது பேட்டிங்கால் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார் மேக்ஸ்வெல்.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  விராட் கோலி , படிக்கல் இருவரும் களமிறங்கினர். போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் இந்த முறையும் இயான் மோர்கன் ஸ்பின்னர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். முதல் பவர்ப்ளே ஒவர்களை ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் வீசினார். முதல் 6 ஓவர்களில் பேட் கம்மின்ஸ் ஒரு ஓவர் மட்டுமே மோர்கன் கொடுத்தார். மேக்ஸ்வெல் களத்தில் இருந்ததால் பேட் கம்மின்ஸ் கொண்டு வரப்பட்டார்.

  மோர்கன் மூவ்-க்கு கைமேல் பலன் கொடுத்தது. அபாயகரமான பேட்ஸ்மேனான விராட் கோலி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரில் தூக்கி அடிக்க முற்பட்டு ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கோலி 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

  உள்ளூர் போட்டிகளின் மூலம் கவனம் ஈர்த்த ரஜத் பட்டிதார் களமிறங்கினார். அதேஓவரில் வருண் சக்கரவர்த்தியின் கடைசி பந்தில் ரஜத் பட்டிதார் க்ளீன் போல்டானார். இதனையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். மேக்ஸ்வெல், படிக்கல் இருவரும் ஃபார்ட்னர்ஷிப் பில்ட் செய்தனர். ஆர்.சி.பி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் ஒரு பக்கம் தொடர்ந்து அதிரடிக் காட்டத் தொடங்கினார்.

  ஆஃப் சைடு.. லெக் சைடு..ரிவர்ஸ் ஸ்வீப் என பந்துவீச்சாளர்களை மேக்ஸ்வெல் புரட்டி எடுத்தார். படிக்கல் ஸ்ட்ரைக் ரோட்டேட் செய்து மேக்ஸ்வெல்லுக்கு ஒத்துழைப்பு அளித்தார். பவர் ப்ளேயில் சிக்கனம் காட்டிய வருண் மீண்டும் பந்துவீச வந்தார். இந்த முறை மேக்ஸ்வெல் அவரது பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார். மேக்ஸ்வெல், படிக்கல் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் படிக்கல் 12வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

  இதனையடுத்து டிவில்லியர்ஸ் களமிறங்கினார். டிவில்லியர்ஸ் - மேக்ஸ்வெல் இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்தனர். இவர்கள் இருவரும் 31 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து கைல் ஜேமிசன் களமிறங்கினார். ஹர்பஜன் வீசிய 19-வது ஓவரில்  கைல் ஜேமிசன் சிக்ஸர், பவுண்டரி விளாசினார். அதேஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை விளாசி தனது அரைசதத்தை கடந்தார். 20-வது ஓவரை ரஸல் வீசினார். அந்த ஓவரில் சிக்ஸர், பவுண்டரியுமாக விளாசினார். இந்த ஓவரில் 21  ரன்கள் வந்தது. ஆர்.சி.பி 20 ஓவர்கள் முடிவில்   4 விக்கெட்  இழப்பு 204  ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி அதிகப்பட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  Published by:Ramprasath H
  First published: