• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 KKR vs DC: கண்ணீர் விட்ட ரிஷப் பண்ட், அஸ்வின் பவுலிங் மீது ஸ்ரீகாந்த் வைத்த விமர்சனம்

IPL 2021 KKR vs DC: கண்ணீர் விட்ட ரிஷப் பண்ட், அஸ்வின் பவுலிங் மீது ஸ்ரீகாந்த் வைத்த விமர்சனம்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

அன்று சிஎஸ்கே அணியிடம் தோல்வி தழுவிய போதே டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் உடல்மொழி பரிதாபமாக இருந்தது, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றிக்கு அருகில் வந்து திரிபாதி அடித்த சிக்ஸில் நிலைகுலைந்துப் போயினர்.

  • Share this:
    பிரிதிவி ஷா கண்ணீரை அடக்கிக் கொண்டு மைதானத்தில் அப்படியே படுத்து விட்டார், ரிஷப் பண்ட் கண்ணீர் விட்டார். இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். கொல்கத்தா போட்டியை விட சிஎஸ்கே போட்டியில்தான் டெல்லி வென்றிருக்க வேண்டும், அன்று கடைசி ஓவரில் ஷர்துல் தாக்கூரை ஏதோ வெஸ்லி ஹால் போல் 3 டாட்பால்களை விட்டார் ரிஷப் பண்ட். அதே போல் டாம் கடன் அதுவரை நன்றாக வீசியிருந்தாலும் யார் கிரீசில் நிற்கிறார்களோ அவருக்கு ஏற்பத்தான் பவுலிங்கைக் கொடுத்திருக்க வேண்டும்.

    ரபாடாவிடம் கொடுத்து அடித்திருந்தால் என்று சிலர் கேட்கின்றனர், ரபாடாவிடம் கொடுத்திருந்தால் அடிக்க முடியாது என்று யாரும் கூறவில்லை, அவர் அனுபவசாலி தோனி உடம்பை நோக்கி ஷார்ட் பிட்ச் வீசினால் அவர் வயதுக்கு அவரால் ரிப்ளெக்சுடன் ஆட முடியாது என்ற கிரிக்கெட் காரணங்களையே கூறுகிறோம், அப்படி ரபாடாவை அடித்து தோனி ஜெயித்திருந்தால் உண்மையில் தோனி அதே பழைய தோனிதான் என்று சொல்லி விட்டுப்போகப் போகிறோம், எனவே நேற்றைய போட்டி சும்மா விறுவிறுப்புக் கூட்ட விக்கெட்டுகள் சரிந்ததாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது, ஆனால் அது இப்படி ஆகும் என்று இரு அணிகளுமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    உண்மையில் நேற்று ஆட்டத்தை முதல் 12 ஓவர்களிலேயே கொல்கத்தா முடித்து விட்டது, பிட்ச் போன்ற சமன்பாடுகளை வெங்கடேஷ் அய்யர் நிராகரித்து விட்டார், அவர் ஆடும் ஷார்ஜா பிட்ச் வேறு மாதிரித்தான் இருந்தது. மற்ற வீரர்கள் ஆடும்போது ஸ்ட்ரோக் ஆடுவது கடினம் போல் தெரிந்தது, வெங்கடேஷ் அய்யர் ஆடும்போது அந்தப் பிட்ச்சா இது என்பது போல் தெரிந்தது.

    Also Read: 1983 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிக்கள்- மலரும் நினைவுகள்

    அஸ்வின் மேல் பெரிய குற்றச்சாட்டு என்னவெனில் வர்ணனையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தே கூறினார், தன்னுடைய நார்மல் ஆஃப் ஸ்பின்னை போட்டு பிளைட் செய்திருந்தால்தான் அவரது அச்சுறுத்தல் புரியும், ஒவ்வொரு பந்தையும் பரிசோதனை செய்து கொண்டிருந்தால் விக்கெட் விழாது, இதை சொன்னாலும் அஸ்வின் கேட்க மாட்டார் என்று ஸ்ரீகாந்த் கூறினார்.



    இந்நிலையில் தோல்வியைத் தாங்காத டெல்லி வீரர் பிரிதிவி ஷா மைதானத்தில் படுத்தே விட்டார், ரிஷப் பண்ட் கண்ணீர் விட்டார், இந்த வீடியோ வெளியாகி வைரலானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: