இன்றைய ஐபிஎல் போட்டியின் போது பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியின் கேப்டன் டாஸ் வென்றதை பார்த்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் கொடுத்த ரீயாக்ஷன் ரசிகர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்களையும் கவர்ந்தது.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது, இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் அடுத்ததாக பிளே ஆஃப் சுற்று தொடங்க இருக்கிறது.
இன்றைய 56வது ஐபிஎல் போட்டியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதல் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதாக் இன்றைய மோதல் இரு அணிகளுக்கும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் இடத்தையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) இரவு 7.30 மணிக்கு டெல்லி - பெங்களூரு அணிகளுக்கிடையேயான மோதல் தொடங்கியது. முன்னதாக டாஸ் போடுவதற்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தும் களத்துக்கு வந்தனர்.
Also Read:
இந்திய அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஜாக்பாட் – ரமீஸ் ராஜா வெளியிட்ட ரகசியம்
அப்போது டாஸில் பெங்களூரு கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்றார். அதனை பார்த்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், போலியாக அழுதார். அவரின் அழுகை களத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது, நெட்டிசன்களையும் கவர்ந்திருக்கிறது.
பொதுவாகவே ரிஷப் பந்த், களத்தில் இது போன்ற சேஷ்டைகள் செய்யக்கூடியவர் என்பதால் அவரின் சேஷ்டைகளுக்காகவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கிறதோ இல்லையோ எங்களையெல்லாம் ரிஷப் பந்த் தனது செயலால் வசீகரித்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.