MI vs RCB | கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி

MI vs RCB | கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி

ஐ.பி.எல் 2021 தொடரின் முதல் போட்டியல் மும்பை இந்தியன் அணியை பெங்களூரு அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழத்தியது. 

  • Share this:
    ஐ.பி.எல் 14வது சீசன் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா - கிறிஸ் லின் களமிறங்கினர். 4-வது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து மிரட்டிய ரோஹித் அதே ஓவரில் தேவையில்லாத ரன் அவுட்டில் சிக்கினார்.

    இதனையடுத்து சூர்யா குமார் யாதவ் களமிறங்கினார். முதல் பந்தில் இருந்தே தனது அதிரடியை அவர் தொடங்கினார். முதல் 6 ஓவர் முடிவில் மும்பை அணி 41 ரன்கள் எடுத்திருந்தது. பவர்ப்ளே-க்கு பிறகு கியரை மாற்றியது மும்பை அணி. சாஹல் ஓவரில் அதிரடி காட்டினார் லின். ஒரு சிக்ஸ்ர், பவுண்டரி விளாசினார். ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் இருவரும் ஆடினர். மும்பை அணி 10 ஓவர்களுக்கு 86 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்ய குமார் யாதவ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் ஓவரில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    மும்பை அணிக்காக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய லின் 49 ரன்களில் அவுட்டானார். முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி, அடுத்த 10 ஓவர்களில் விக்கெட்களை இழந்தும் ரன் சேர்க்க முடியாமல் சொதப்பியது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி களமிறங்கினர். வாஷங்டன் சுந்தர் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். விராட் கோலி 33 ரன்னில் அவுட்டானார்.

    மேக்ஸ்வேல் 39 மற்றும் அதிரடியாக விளையாடிய டி-வில்லியர்ஸ் 48 ரன்னிகளிலும் அவுட்டாகினர். .கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஹர்சல் படேல் கடைசி பந்தில் ஒரு ரன் சேர்த்து ஆர்.சி.பி-யை வெற்றியடைய வைத்தார்.

    ஐ.பி.எல் 2021 தொடரின் முதல் வெற்றி கணக்கை ஆர்.சி.பி தொடங்கி உள்ளது. ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடையும் என்ற நிலை இந்த ஐ.பி.எல் சீசனில் அரங்கேறி உள்ளது.
    Published by:Vijay R
    First published: