• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • RCB vs SRH| கடைசி 3 புல்டாஸ்களை கோட்டை விட்ட டிவில்லியர்ஸ்! கோலியை தட்டிப்போட்டு எடுத்த புவனேஷ்வர் குமார்

RCB vs SRH| கடைசி 3 புல்டாஸ்களை கோட்டை விட்ட டிவில்லியர்ஸ்! கோலியை தட்டிப்போட்டு எடுத்த புவனேஷ்வர் குமார்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

ஏ.பி.டிவில்லியர்ஸ்

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அதிர்ச்சித் தோல்வியை பரிசாக அளித்தது. 141 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் கோலி படை 137 ரன்களுக்கு முடிந்தது.

  • Share this:
    ஆர்சிபியின் இந்த 4 ரன்கள் தோல்வியினால் டாப் 2 இடங்களில் இடம்பெறுவதற்கான ஆர்சிபி கனவு முறிந்தது. புவனேஷ்வர் குமார் முடித்து வைத்தார். 153 கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரன் மாலிக் 4 ஓவர் 21 ரன் 1 விக்கெட் என்று அதகளப்படுத்தினார். விராட் கோலி எடுத்த எடுப்பிலேயே புவனேஷ்வர் குமாரை ராஜ கவர் ட்ரைவ் அடித்தார், ஆனால் புவனேஷ்வர் குமார் இங்கிலாந்து, தொடரை பார்த்திருப்பார் போலும் மிடில் ஸ்டம்பில் ஒரு பந்தை வீச அதை வாரிக்கொண்டு பிளிக் ஆடப்போய் எல்.பி.ஆனார் விராட் கோலி. பெரிய விக்கெட்.

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை எனும்போது டிவில்லியர்ஸ் கிரீசில் இருக்கிறார், புவனேஷ்வர் குமாரி வீசினார், இதில் ஒரு பந்தைத்தான் டிவில்லியர்ஸ் தலைக்கு நேராக சிக்ஸ் விளாசினார் மற்றபடி 3 புல்டாஸ்களை அவரால் அடிக்க முடியவில்லை, டிவில்லியர்சினால் புல்டாஸை அடிக்க முடியவில்லை என்பது ஐபிஎல் திருவிளையாடல்களில் ஒன்றா? அல்லது டிவிலியர்ஸும் மெல்ல மெல்ல தோனியாகி வருகிறாரா என்பதை காலமே தீர்மானிக்கும்.

    முன்னதாக ஜேசன் ராய் (44) கேன் வில்லியம்சன் (31) கூட்டணி வெளுத்து வாங்கி 70 ரன்களை 2வது விக்கெட்டுக்காக சேர்த்தது. ஆனால் கடைசி 8 ஓவர்களில் 50 ரன்களையே எடுத்தது சன் ரைசர்ஸ். ஹர்ஷல் படேல் பிரமாதமான ஆஃப் கட்டரில் வில்லியம்சனை பவுல்டு செய்தார். ஹர்ஷல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டேன் கிறிஸ்டியன் 14 ரன்களுக்கு 2 விக்கெட் என்று சன் ரைசர்சை முடக்கினார். பேட்டிங்கில் கிளென் மேக்ஸ்வெல் 40 ரன்களை விளாசினார், இவர் இருக்கும் வரை ஆர்சிபி வெற்றிப்பாதை தீர்க்கமாக இருந்தது, இவர் இல்லாத சிங்கிளுக்கு ஓடி ரன் அவுட் ஆகவும் எல்லாம் முடிந்தது.

    உம்ரன் மாலிக் ஸ்பீட் கிளாக்கில் மணிக்கு 153 கிமீ வேகம் காட்டிய பந்தை வீசினார், கே.எஸ். பரத் விக்கெட்டை எகிறும் ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்த்தினார், பும்ராவுக்குப் பிறகு இந்திய அணிக்கு வரவிருக்கும் முக்கியமான ஒரு வேகப்பந்து வீச்சாளராக உம்ரன் மாலிக் இருப்பார் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம், ஏனெனில் கோலியின் பார்வை இவர் மேல் பட்டு விட்டது. ‘ஒரு பவுலர் மணிக்கு 150 கிமீ வேகம் விசுவதைப் பார்க்க அருமையாக உள்ளது’ என்று கோலி நேற்று கூறினார்.

    Also Read: கடைசி ஓவர் பரபரப்பு: பந்துவீச்சில் அசத்தி பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் இப்படி சன் ரைசர்ஸ் ஆடினால் பிரமாதமாக இருக்கும் ஆனால் நாம் ஒன்று நினைக்கிறோம் உஷ் கண்டுக்காதீங்க வேறொன்று நினைக்கிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: