• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலிக்கு 2 கேட்ச் ட்ராப்; படிக்கல் அவுட் மறுப்பு: கேள்விக்குறியாகும் ஐபிஎல் நம்பகத்தன்மை

கோலிக்கு 2 கேட்ச் ட்ராப்; படிக்கல் அவுட் மறுப்பு: கேள்விக்குறியாகும் ஐபிஎல் நம்பகத்தன்மை

பிளே ஆப் சுற்றில் விராட் கோலி படை ஆர்சிபி.

பிளே ஆப் சுற்றில் விராட் கோலி படை ஆர்சிபி.

சிஎஸ்கே, ஆர்சிபி பிளே ஆஃப் டெல்லி கேப்பிடல்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. நேற்று கோலி தலைமை ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியின் விட்டுக்கொடுப்பு உஷ் கண்டுக்காதீங்க ஆட்டத்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

  • Share this:
ஐபிஎல் போட்டிகளின் நம்பகத்தன்மை கிட்டத்தட்ட 2013-ல் நடந்த சூதாட்டப் புகார் அதனையொட்டிய வீரர்கள் மற்றும் அணிகள் மீதான கோர்ட் வழக்கு, இதனையடுத்த தடை உத்தரவுகள் ஆகியவற்றுக்குப் பிறகே ஐபிஎல் போட்டிகள் உண்மையாகவே கிரிக்கெட்டுக்குரிய போட்டித்தன்மையுடனும் இறுதி வரை போராடும் விட்டுக் கொடுக்காத தன்மையுடன் ஆடப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். இந்தத் தொடரில் அன்று சிஎஸ்கே அணிக்கு கொல்கத்தா பவுலர் பிரசித் கிருஷ்ணா, ஜடேஜாவுக்குப் போட்டுக்கொடுத்தார்.

பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியின் டெஸ்ட் பவுலரான பஞ்சாப் கிங்ஸ் அணியின் முகமது ஷமி சொல்லி சொல்லி போட்டுக்கொடுத்தார், அதே போட்டியில் குருணால் பாண்டியா பவர் ப்ளேயில் வீசிய போது அவரை அட்டாக் செய்ய முயற்சியே செய்யவில்லை. அவர் 3 ஓவர் 16 ரன்கள் என்று கிரேட் எஸ்கேப் ஆகவிடப்பட்டார், அதே போட்டியில் அதிரடி மன்னன் கெய்லை தொடக்க வீரராக களமிறக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் பவுண்டரியே அடிக்கவில்லை பஞ்சாப்.

இந்நிலையில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 9, 10 ரன்களில் இருந்த போது இருமுறை கேட்ச் விடப்பட்டது. அனைத்துக்கும் மேலான உஷ் கண்டுக்காதீங்க தருணம் படிக்கல் 35 ரன்கள் எடுத்திருந்த போது ரிவர்ஸ் ஸ்வீப் சரியாக சிக்கவில்லை பந்து தெளிவாக படிக்கல்லின் கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. ராகுலின் டி.ஆர்.எஸ் முயற்சியும் தோல்வி அடைய மிகுந்த சர்ச்சைக்குரிய முறையில் படிக்கல் தொடர்ந்து பேட் செய்தார். 40 ரன்களில் அவர் ஆட்டமிழந்தாலும் தெளிவாக அவுட் என்று தெரிந்தும் எப்படி கொடுக்காமல் விடப்பட்டது என்பது ஐபிஎல் உஷ் கண்டுக்காதீங்க தருணம் தான்.

பிறகு கிளென் மேக்ஸ்வெலை அடிக்கவிட்டது, அதன் பிறகு விரட்டலில் மயங்க் அகர்வால் (57), கே.எல்.ராகுல் சேர்ந்து 91 ரன்களை 11 ஓவருக்குள் சேர்த்தது, ஆனால் மடமடவென அவுட் ஆகி ஆர்சிபிக்கு வெற்றி தேடித்தந்தது இவையெல்லாம் ஆர்சிபி அணியை எப்படியாவது பிளே ஆப் முடிந்தால் பைனலுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற முனைப்பைக் கொண்டதாகத் தெரிந்தது. கோலி கேப்டன்சியை விட்டுப் போவதற்கு முன்பாக அவருக்கு ஐபிஎல் கோப்பையை பரிசாக அளிப்பதில் அவரை விடவும் மற்ற அணிகளுக்கு முனைப்பு அதிகமாக இருப்பதையே பஞ்சாபின் இந்தத் தோல்வி காட்டுகிறது.

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: