• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • RCBvsKKR| Sunil Narine| ஆர்சிபியின் 4 சொக்கத் தங்கங்களை வீழ்த்திய பிறகு 3  ‘பிளாட்டினம்’ சிக்ஸ்- சுனில் நரைன் எனும் அற்புதன்

RCBvsKKR| Sunil Narine| ஆர்சிபியின் 4 சொக்கத் தங்கங்களை வீழ்த்திய பிறகு 3  ‘பிளாட்டினம்’ சிக்ஸ்- சுனில் நரைன் எனும் அற்புதன்

கோலி படைக்கு சிம்ம சொப்பனமான சுனில் நரைன்.

கோலி படைக்கு சிம்ம சொப்பனமான சுனில் நரைன்.

ஐபிஎல் எலிமினேட்டர் ரவுண்டில் நேற்று ஆர்சிபி தோற்று வெளியேறியது, எதிர்பார்த்தது போலவே கொல்கத்தாவின் ஆக்ரோஷத்துக்கு முன்பாக விராட் கோலி படையின் ஆக்ரோஷம் தணிக்கப்பட்டு அடக்கப்பட்டது. இன்னொரு எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிடல்சை சந்திக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

  • Share this:
    ஐபிஎல் எலிமினேட்டர் ரவுண்டில் நேற்று ஆர்சிபி தோற்று வெளியேறியது, எதிர்பார்த்தது போலவே கொல்கத்தாவின் ஆக்ரோஷத்துக்கு முன்பாக விராட் கோலி படையின் ஆக்ரோஷம் தணிக்கப்பட்டு அடக்கப்பட்டது. இன்னொரு எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிடல்சை சந்திக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

    நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் 4 சொக்கத்தங்க பேட்ஸ்மென்களான விராட் கோலி (39), ஸ்ரீகர் பரத் (9), கிளென் மேக்ஸ்வெல் (15), ஏ.பி.டிவில்லியர்ஸ் (11) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்திய பொற்கைப் பாண்டியனான சுனில் நரைன் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆர்சிபியை மடக்கினார். பிறகு பேட்டிங்கில் இறங்கி மிக மிக முக்கியமான கட்டத்தில் 3 அதிரடி சிக்சர்களை அடித்து ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பி ‘இம்பேக்ட் பிளேயர்’ ஆனார் சுனில் நரைன்.

    கொல்கத்தா அணி 12வது ஓவ்ரில் 80/3. 59 ரன்களை 51 பந்துகளில் எடுக்க வேண்டும் என்பது இந்த ஷார்ஜா பிட்சில் சாதாரணமல்ல. அப்போதுதான் இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் மறக்கப்பட்டு விட்ட பிஞ்ச் ஹிட்டர் கொள்கையை இயான் மோர்கன் மீண்டும் அறிமுகம் செய்தார், சுனில் நரைனை பிஞ்ச் ஹிட்டராக இறக்கினார். இறங்கிய ஜோருக்கு 3 சிக்சர்களை விளாசினார், ஒரு வைடை வேறு வீசினார் டேன் கிறிஸ்டியன்.

    அதே போல் ஆர்சிபி பேட்டிங்கின் போதும் நல்ல பவர் ப்ளே அந்த அணிக்கு அமைந்தது, 53/1 என்று இருந்தனர். அதன் பிறகு வந்தார் நரைன் அடுத்த 11 ஓவர்களில் 60 ரன்கள்தான் எடுக்க முடிந்தது காரணம் நரைன் ஆர்சிபியின் ரத்தின முத்தான கோலி, ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் விக்கெட்டுகளை அருமையான ஏமாற்று பந்தின் மூலம் வீழ்த்தினார். கோலி கிளீன் பவுல்டு, டிவில்லியர்ஸ் கிளீன் பவுல்டு, கிளென் மேக்ஸ்வெல் ஸ்லாக் ஸ்வீப்பில் முழுதும் ஏமாந்தார்.

    Also Read: 120% உழைப்பைக் கொடுத்துள்ளேன்: கடைசிவரை ஆர்.சி.பிக்குதான் விளையாடுவேன் - கோலி உருக்கம்

    விராட் கோலியே சுனில் நரைன் பற்றி பாராட்டிப் பேசிய போது, “நரைன் எப்போதுமே தரமான பவுலர், இன்றும் அவர் தன் பெயரை நிரூபித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சீரான விக்கெட் டேக்கர் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை காட்டினார். அவர் மட்டுமல்ல ஷாகிப் அல் ஹசன், வருண், நரைன் எங்களுக்கு மிடில் ஓவர்களில் கடும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். எங்களால் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை.” என்று பாராட்டினார்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: