Home /News /sports /

RCB vs KKR| நாங்களும் மனிதர்கள்தான், எங்கள் மீது குப்பையைக் கொட்டாதீர்கள்- கிளென் மேக்ஸ்வெல் வேதனை

RCB vs KKR| நாங்களும் மனிதர்கள்தான், எங்கள் மீது குப்பையைக் கொட்டாதீர்கள்- கிளென் மேக்ஸ்வெல் வேதனை

மேக்ஸ்வெல் வேதனை

மேக்ஸ்வெல் வேதனை

பிரமாதமான சீசன், எங்கள் ஆட்டத்தை யாரும் அபகரிக்க முடியாது. ஆனால் சமூக ஊடகங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. உண்மையில் இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நாங்களும் மனிதகள்தான்.. எங்களின் சிறந்த பங்களிப்பை தினமும் செய்து வருகிறோம்.

    138 ரன்களுக்குச் சுருண்டாலும் ஆர்சிபி அணி கொல்கத்தாவை சுலபமாக வெற்றி பெற விடவில்லை, கடைசி வரை போராடியது, ஹர்ஷல் படேல் பிரமாதமாக வீசினார், ஆனால் என்ன செய்வது சுனில் நரைன் போன்ற ஒரு ஆல்ரவுண்டரிடம் இழந்ததை என்ன செய்ய முடியும்?

    ஆனால் டேன் கிறிஸ்டியனை பலிகடாவாக்கி சமூக ஊடகங்களில் கடும் அவதூறுகள் பரப்பப்படுவதையடுத்தும், ஆர்சிபி தோல்விக்கு வீரர்க்ள் மேல் கடும் அவதூறுகளை சமூக வலைத்தளவாசிகள் மேற்கொள்வதையும் ஆர்சிபி வீரர் கிளென் மேக்ஸ்வெல் வேதனையுடன் சாடியுள்ளார். ஒருமுறை கூட இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஆனால் உலகின் தலைசிறந்த கேப்டன் அணியை வழிநடத்தியும் என்பது ரசிகர்களுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துள்ளது.

    ஏனெனில் நேற்றிலிருந்தே இறுதியில் சந்திப்போம், கோலியா, தோனியா என்ற ரீதியில் சமூக ஊடகங்களில் விவாதங்கள் தொடங்கி விட்டது, ஆனால் அந்த விவாதம் அல்பாயுசில் நேற்று ஆர்சிபி தோல்வியுடன் முடிந்தது. இந்நிலையில் வீரர்கள் மீது அவதூறு பேசும் மோசமான போக்கை கிளென்மேக்ஸ்வெல் கண்டித்துள்ளார்.

    “கிரேட் சீசன் ஆர்சிபிக்கு. ஆனால் எங்கு இருக்க வேண்டுமோ அந்த இடத்துக்கு கொஞ்சம் பின் தங்கி விட்டோம். ஆனால் இந்த பிரமாதமான சீசன், எங்கள் ஆட்டத்தை யாரும் அபகரிக்க முடியாது. ஆனால் சமூக ஊடகங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. உண்மையில் இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நாங்களும் மனிதகள்தான்.. எங்களின் சிறந்த பங்களிப்பை தினமும் செய்து வருகிறோம்.

    டீசண்டாக நயநாகரீகத்துடன் நடந்து கொள்ளுங்கள், அவதூறு பரப்பாதீர்கள். ஆனால் சில உண்மையான ரசிகர்களுக்கு நன்றி, அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகடன் பட்டிருக்கிறோம். ஆனால் சில படுமோசமான மனிதர்கள் சோசியல் மீடியாவில் இருக்கின்றனர், இந்த பயங்கர மனிதர்களால் சோசியல் மீடியா என்பதே ஒரு பயங்கர இடமாக மாறி வருகிறது.

    இதை ஏற்க முடியாது. தயவு செய்து அவர்களைப் போல் யாரும் இருக்க வேண்டாம். என்னுடைய நண்பர், அணியின் சகவீரரையோ நீங்கள் அவதூறு செய்தால் நீங்கள் பிளாக் செய்யப்படுவீர்கள். ஒரு அசிங்கமான நடத்தையில் என்ன பெருமை இருக்க முடியும். இதற்கு எக்ஸ்கியூஸ் கிடையாது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Glenn Maxwell, IPL 2021, RCB

    அடுத்த செய்தி