‘இது மேக்ஸ்வெல்லுக்கும் தெரியும்’: யஜுவேந்திர செகல் உடைத்த ரகசியம்

யஜுவேந்திர சாஹல்.

ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில் அதன் பிரதான ரிஸ்ட் ஸ்பின்னர் யஜுவேந்திர செகல் கோலியின் கேப்டன்சி ஸ்டைல் பற்றி கூறியுள்ளார்.

 • Share this:
  ஆர்சிபி அணி யுஏஇ சுற்றில் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை செப்.20ம் தேதி சந்திக்கிறது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை செப்டம்பர் 24ம் தேதியும் மும்பை இந்தியன்ஸை செப்.26ம் தேதியும், ராஜஸ்தான் ராயல்சை செப்.29ம் தேதியும் பஞ்சாப் அணியை அக்டோபர் 3ம் தேதியும். ஹைதராபாத் அணியை அக்டோபர் 6ம் தேதியும் எதிர்கொள்கிறது ஆர்சிபி. புள்ளிகள் அட்டவணையில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது ஆர்சிபி.

  டி20 உலகக்கோப்பை அணியில் செகலுக்கு இடமில்லை. இந்நிலையில் அவர் கூறியதாவது: “தற்போது எனது முழு கவனமும் அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மீது தான் இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

  இலங்கை தொடரில் சிறப்பான பார்மில் இருந்தேன். அதே ஃபார்மை ஐ.பி.எல். தொடரிலும் தொடருவேன் என்று நம்புகிறேன். நான் ஓய்வு பெறும் வரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவே விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எப்போதெல்லாம் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறேனோ? அது பெங்களூரு அணிக்காகவே இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும்.

  கேப்டன் விராட்கோலி வித்தியாசமானவர். அவர் மெத்தனமாக செயல்படுவதை விரும்பமாட்டார். எப்போதும் களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர். இது மேக்ஸ்வெல்லுக்கும் தெரியும். இதனால் இங்கு துளி கூட மெத்தனம் காட்ட வாய்ப்பு கிடையாது” என்றார் செகல்.

  Also Read: சிஎஸ்கே எப்படி சமாளிக்கப் போகிறது? : ஸ்டார் பேட்ஸ்மென் ஆடுவதில் சந்தேகம்

  இந்த ஐபிஎல் தொடரில் லெக்ஸ்பின்னர் ராகுல் சாகர் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4ம் இடத்திலும் 10 விக்கெட்டுகள் உடன் ஆப்கானின் ரஷீத் கான் 5ம் இடத்திலும் உள்ளனர், செகலுக்கு இந்த ஐபிஎல் தொடர் சரியாக அமையாமல் 7 ஆட்டங்களில் இதுவரை 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து ஐபிஎல் பவுலர்கள் அட்டவணையில் 33ம் இடத்தில் இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: