விராட் கோலி பற்றி அப்படி தவறாக என்ன கூறினார் டேன் கிறிஸ்டியன்: ஆர்சிபி எச்சரிக்கை ஏன்?

விராட் கோலி பற்றி அப்படி தவறாக என்ன கூறினார் டேன் கிறிஸ்டியன்: ஆர்சிபி எச்சரிக்கை ஏன்?

கோலி

கிரேட் கிரிக்கெட்டர் என்ற போட்காஸ்ட் ஒலிபரப்பில் பேசிய டேன் கிறிஸ்டியன், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பற்றி தவறாகக் கூறியதற்காக ஆர்சிபியினால் ஒப்பந்த மீறல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  கிரேட் கிரிக்கெட்டர் என்ற போட்காஸ்ட் ஒலிபரப்பில் பேசிய டேன் கிறிஸ்டியன், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பற்றி தவறாகக் கூறியதற்காக ஆர்சிபியினால் ஒப்பந்த மீறல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ஐபிஎல் 2021-ல் டேன் கிறிஸ்டியன் ஆர்சிபி அணிக்கு ஆடி வருகிறார். பிறகு ஆர்சிபி அணி கேட்டுக் கொள்ள அந்த போட்காஸ்ட் வீடியோ நீக்கப்பட்டது. அந்த ஒலிப்பதிவில் விராட் கோலியும் கைல் ஜேமிசன் பேசிக்கொண்டதை டேன் கிறிஸ்டியன் போட்டு உடைத்ததனால் வந்த விளைவு இது.

  அதாவது ஒரு வலைப்பயிற்சி செஷன் முடிந்தவுடன் வீரர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அதில் விராட் கோலியும் கைல் ஜேமிசனும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு டியூக் பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் வீசுவது பற்றி இருவரும் அளவளாவி உள்ளனர்.

  இது பற்றி டேன் கிறிஸ்டியன் கூறியதாவது:

  விராட் கோலி தகவலை மறைப்பதில் கெட்டி. இங்கு ஐபிஎல் முதல் வாரத்தில் இருக்கிறோம். வலைப்பயிற்சி முடிந்து நாங்கள் 3 பேர் அங்கு அளவளாவிக் கொண்டிருந்தோம். விராட் கோலியும் கைல் ஜேமிசனும் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசினார்கள். அப்போது கோலி, ‘ஜேமி டியூக் பந்துகளில் அதிகம் வீசுகிறீர்கள் போலிருக்கிறதே என்றார்.

  உடனே ஜேமிசன் ஆம் 2 பந்துகளை இங்கு வைத்திருக்கிறேன். இதில் வீசிப்பழகுவேன் என்றார். அப்போது விராட் கோலி, டியூக் பந்துகளில் எனக்கு நீ வீசினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார். அதற்கு ஜேமிசன், “உங்களுக்கு வீச வாய்ப்பேயில்லை.” என்றார், ஏன் தெரியுமா அவர் எப்படி வீசுகிறார் என்பதை கோலி நன்றாகக் கணித்து விடுவார், பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் நியூஸிலாந்தும், இந்தியாவும்தான் மோதுகின்றன.

  என்றார் டேன் கிறிஸ்டியன்.

  இதனையடுத்து இது பிக்பாஸ் போன்ற ரியால்டி ஷோ போன்றதுதானே, அதனால் வெளியே சொல்லக் கூடாது, போன்ற உத்தரவுகள் ஒப்பந்தத்தில் இருக்கும் இதைச் சுட்டிக்காட்டி டேன் கிறிஸ்டியனுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது ஆர்சிபி.

  அப்படி என்ன தவறாகக் கூறிவிட்டார் டேன் கிறிஸ்டியன்? என்பதுதான் இதில் புரியாத புதிர்..
  Published by:Muthukumar
  First published: