ஆர்.சி.பி ஓப்பனர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா பாசிட்டிவ்: அடுத்தடுத்து நோய்தொற்றால் பாதிக்கப்படும் ஐபிஎல் வீரர்கள்!

ஆர்.சி.பி ஓப்பனர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா பாசிட்டிவ்: அடுத்தடுத்து நோய்தொற்றால் பாதிக்கப்படும் ஐபிஎல் வீரர்கள்!

தேவ்தத் படிக்கல்

டெல்லி வீரர் அக்ஸர் பட்டேலை அடுத்து பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
ஐபிஎல் தொடர் நெருங்கியுள்ள நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவதத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இது பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேவதத் படிக்கல், தற்போது குவாரண்டைனில் இருந்து வருவதாகவும் அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக திகழ்ந்தவர் இந்த தேவ்தத் படிக்கல் தான். கடந்த சீசசின் இவர் 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி உள்ளார். எனவே தேவ்தத் படிக்கல் கொரோனா காரணமாக தாமதமாக அணிக்கு திரும்பினால் அது பெங்களூரு அணிக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ரானா மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்ஸர் பட்டேல் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகள் நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கண்டெண்ட் பிரிவு ஊழியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கொரோனா 2ம் அலை ஐபிஎல் சீசனுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

சிறந்த கதைகள்