• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs RR | சிவம் துபே மிரட்டல்... ராஜஸ்தான் அபார வெற்றி

CSK vs RR | சிவம் துபே மிரட்டல்... ராஜஸ்தான் அபார வெற்றி

ஷிவம் துபே

ஷிவம் துபே

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபேவின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்து.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அபுதாபி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வழக்கம் போல் சிறப்பாக விளையாடினார்கள். டூ-பிளெசிஸ் 25 ரன்களில் திவாட்டியா பந்துவீச்சில் அவுட்டாகினார்.

    நீண்ட நாட்களுக்கு பின்னர் சுரேஷ் ரெய்னா 3-வது களமிறங்கினார். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா 3 ரன்னில் அவுட்டாக அவரை தொடர்ந்து வந்த மொயின் அலி 21 ரன்னிலும் அம்பாதி ராயுடு 2 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் அதிரடியாக விளையாடி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். ருதுராஜ் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்தார்.  இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

    190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் யாஸ்வி ஜெய்ஷ்வால் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தனர். எவின் லூயின் 27 ரன்களும், ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர்.

    கேப்டன் சஞ்சு சாம்சன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சர்துல் தாகூர் பந்துவீச்சில் வெளியேறினார். அந்த அணியின் சிவம் துபே அதிரயாக விளையாடி ராஜஸ்தானை வெற்றி பெற செய்தார். 42 பந்துகளை எதிர்கொண்ட சிவம் துபே 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 64 ரன்கள் எடுத்தார். 17.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து ராஜஸ்தான் அணி எளிதாக இலக்கை எட்டியது.

    இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ள நிலையில் ப்ளே ஆப் வாய்ப்பையும் தக்கவைத்து கொண்டுள்ளது. ராஜஸ்தான் மீதமுள்ள 2 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட் உடன் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: