கிறிஸ் மோரிஸ் அட்டகாசமான பந்துவீச்சு.. சஞ்சு சாம்சன் நிதானம் - இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

கிறிஸ் மோரிஸ் அட்டகாசமான பந்துவீச்சு.. சஞ்சு சாம்சன் நிதானம் - இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

சஞ்சு சாம்சன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பவர் ஹிட்டர்கள் இருந்ததால் நல்ல ஸ்கோரிங் கேமாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள். இரண்டு அணிகளும் 4 போட்டிகளில் 3 தோல்வி ஒரு வெற்றியை பெற்றிருந்தது. இரு அணிகளும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகள் லோ ஸ்கோரிங் கேமாக இருந்ததால். பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான வான்கடே மைதானத்தில் பெரிய ரன்களை எதிர்ப்பார்த்திருந்தனர் ரசிகர்கள்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பவர் ஹிட்டர்கள் இருந்ததால் நல்ல ஸ்கோரிங் கேமாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியால் பவர்ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களே எடுக்க முடிந்தது. சுப்காம் கில் 19 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறியிருந்தார். நித்திஷ் ரானா 22 ரன்கள் எடுத்த நிலையில் சக்காரியா பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்த வந்த சுனில் நரேன் தன் பங்குக்கு காத்து வீசினார். 6 ரன்களுக்கு அவுட்டாகி அவரும் ஏமாற்றமளித்தார். இதனால் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது.

    கரைசேர்ப்பார் என எதிர்பார்த்த கேப்டன் இயான் மோர்கன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ராகுல் திரிபாதி அடித்த பந்தில் சிங்கிள் எடுக்க மோர்கன் முயற்சி செய்தார். கிறிஸ் மோரிஸ் சிறப்பான த்ரோவால் ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பயத்தை காட்டிய மூம்மூர்த்திகளான தினேஷ் கார்த்திக், ரஸல், பேட் கம்மின்ஸ் வருகைக்காக காத்திருந்தனர். தினேஷ் கார்த்திக் கொஞ்சம் நம்பிக்கை தரும்படி விளையாடினார். தினேஷ் கார்த்திக், ராகுல் திரிபாதி இருவரும் கொல்கத்தாவின் இன்னிங்ஸை மீட்பது போல் விளையாடினர். இதற்கிடையில் ராகுல் திரிபாதி 36 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து ரஸல் வந்தார். கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாசிய ரஸல் அதேஓவரில் வீழ்ந்தார். அதேஓவரில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். கொல்கத்தா அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் அணியில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸை பட்லர், ஜெய்ஸ்வால் ஓப்பன் செய்தனர். ஷிவம் மாவி முதல் ஓவரை சிறப்பாக வீசினார். கொல்கத்தாவுக்கு பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்கும் வருண் சக்கரவர்த்தியை பந்துவீச அழைத்தார் கேப்டன் மோர்கன். அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. கூக்ளியில் சிக்கிய பட்லர் எல்.பி.டபில்யூ ஆகி வெளியேறினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஷிவம் மாவி பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டானார். ராஜஸ்தான் அணி பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்பு 50 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தார். ஷிவம் மாவி கட்டுப்படுத்தினாலும் பேட் கம்மின்ஸ் ஓவர்களை வெளுத்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி-க்கு அடுத்தடுத்த ஓவர்கள் கொடுக்க வில்லை என்ற புகார் எழுந்தது. கம்பீர் கூட மோர்கனை சாடியிருந்தார். இதன்காரணமாக வருணுக்கு அடுத்தடுத்த ஓவர்களை வழங்கினார். கொல்கத்தாவுக்கு விக்கெட் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வருண் தனது மூன்றாவது ஓவரில் ஷிவம் துபேவை அவுட்டாக்கினார். 11 ஓவர் முடிவில் கொல்கத்தா 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. சுனில் நரேன் பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லை. பேட்ஸ்மேன்கள் அவரை எளிதாக எதிர்க்கொண்டனர். ஷிவம் துபே விக்கெட்டுக்கு பிறகு திவேட்டியா களமிறங்கினார். வருண் தனது நான்காவது ஓவரை வீசினார், அந்த ஓவரில் கேட்ச் கண்டத்தில் இருந்து திவேட்டியா தப்பினார்.  ஆனால் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை 5 ரன்களில் வெளியேறினார்.  இதனையடுத்து டேவிட் மில்லர் களமிறங்கினார். மில்லர் வந்ததில் இருந்தே தடுமாறிக்கொண்டிருந்தார்.

    ராஜஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புகு 104 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஒவர்களில் வெற்றிக்கு 30ரன்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணி  18.3 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன்  42 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
    Published by:Ramprasath H
    First published: