• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs RR | கடைசி ஓவரில் கைமாறிய கேம்.. ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

PBKS vs RR | கடைசி ஓவரில் கைமாறிய கேம்.. ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

IPL 2021

IPL 2021

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 32-வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் 6-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை.

    இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ், ஜஸ்வால் களமிறங்கினார்கள். இந்த ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். ஜஸ்வால் 49 ரன்களும், லூயிஸ் 36 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டரில் மஹிபால் லோமோர் 17 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ரன்ரேட்டை கிடுகிடுவென உயர்த்தினார்.

    இதனால் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் எகிறும் என்று எதிர்பார்த்த நிலையில் இறுதி ஓவர்களில் பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக்கி சொதப்பினர். பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பான பர்டனர்ஷிப் அமைத்து 100 ரன்கள் கடந்தனர். பஞ்சாப் அணி 120 ரன்கள் எடுத்த போது தான் முதல் விக்கெட் இழந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் அரைசத்தை தவறவிட்டார். மயங்க் அகர்வால் 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

    பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் எய்டன் மர்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியை தொடங்கினார்கள். பஞ்சாப் போட்டி என்றாலே பரபரப்பு பஞசமிருக்காது என்ற நிலையில் இந்த போட்டியும் அதுப்போன்றே அமைந்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கார்த்தி தியாகி பந்துவீசினார். போட்டியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை அவர் கார்த்தி தியாகி உருவாக்கினார். கடைசி ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி ராஜஸ்தானை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியை ராஜஸ்தான் உட்பட யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: