• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஹார்டு ஹிட்டர், அதிவேக பவுலர் சேர்ப்பு

IPL 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஹார்டு ஹிட்டர், அதிவேக பவுலர் சேர்ப்பு

அதிரடி வீரர் எவின் லூயிஸ்

அதிரடி வீரர் எவின் லூயிஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியிலிருந்து இங்கிலாந்தின் இரண்டு அதிரடி வீரர்களான ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் விலகியதையடுத்து மேஇதீவுகளின் அதிவேக பவுலர், பயங்கர ஹிட்டர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியிலிருந்து இங்கிலாந்தின் இரண்டு அதிரடி வீரர்களான ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் விலகியதையடுத்து மேஇதீவுகளின் அதிவேக பவுலர், பயங்கர ஹிட்டர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆம்! எவின் லூயிஸ் மற்றும் அதிவேக பவுலர் ஒஷேன் தாமஸ் ராஜஸ்தான் அணிக்காக ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இடது கை அதிரடி வீரர் எவின் லூயிஸ் மும்பை இந்தியன்ஸுக்காக 16 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். சராசரி 27, ஸ்ட்ரைக் ரேட் 131.

    ஒஷேன் தாமஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2019-ல் ஆடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இருவரும் இப்போது கரீபியன் பிரிமியர் லீகில் ஆடுகின்றனர், இதில் எவின் லூயிஸ் அதிரடி பார்மில் இருக்கிறார்.

    ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தப்ரைஸ் ஷம்சியை ஒப்பந்தம் செய்துள்ளது, இவர் உலகின் நம்பர் 1 டி20 பவுலர் ஆவார். ஆஸ்திரேலிய பவுலர் ஆண்ட்ரூ டைக்குப் பதிலாக இவர் வந்துள்ளார்.

    இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள்: ரூ.5,000 கோடி ஈட்டும் பிசிசிஐ

    மேலும் கிளென் பிலிப்ஸ் என்ற அதிரடி விக்கெட் கீப்பர் நியூஸிலாந்து பேட்ஸ்மெனை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்தது.

    ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    செப்டம்பர் 21ம் தேதி துபாயில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 மேட்சில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது.

    விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 மேட்ச்களீல் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளில் 3ம் இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: