• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: ஜாஸ் பட்லருக்குப் பதில் ராஜஸ்தான் அணிக்கு புதிய வீரர்: 46 பந்துகளில் சதமடித்த அதிரடி விக்கெட் கீப்பர்

IPL 2021: ஜாஸ் பட்லருக்குப் பதில் ராஜஸ்தான் அணிக்கு புதிய வீரர்: 46 பந்துகளில் சதமடித்த அதிரடி விக்கெட் கீப்பர்

 ஜாஸ் பட்லர்.

ஜாஸ் பட்லர்.

ஐபிஎல் தொடரிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய ஜாஸ் பட்லருக்குப் பதில் நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் கிளென் பிலிப்ஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

  • Share this:
    ஐபிஎல் தொடரிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய ஜாஸ் பட்லருக்குப் பதில் நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் கிளென் பிலிப்ஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

    தனக்கு குழந்தைப் பிறக்கவிருப்பதால் ஐபிஎல் 2021 மீதமுள்ள தொடரிலிருந்து விலகினார் ஜாஸ் பட்லர். இதனையடுத்து நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் கிளென் பிலிப்ஸ் அணிக்கு வருகிறார் .

    அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடருக்காக கிளென் பிலிப்ஸ் பார்படாஸ் ராயல்ஸ் அணியில் ஆடுகிறார். இவர் செப்டம்பர் 19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைகிறார்.

    Also See: IPL 2021: இந்த ஹோட்டலிலா சிஎஸ்கே தங்குகிறது?- யுஏஇ-யில் சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிளென் பிலிப்ஸ் 25 டி20 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக ஆடியுள்ளார். இங்கிலாந்து டி20 தொடரான வைட்டாலிட்டி பிளாஸ்டிலும் ஆடியுள்ளார், இப்போது தி ஹண்ட்ரட் தொடரிலும் ஆடியுள்ளார்.

    பட்லருக்குப் பதில் களமிறங்கும் அதிரடி விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ்


    கடந்த நவம்பரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கிளென் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் கொலின் மன்ரோவின் டி20 சத சாதனையை முறியடித்தார் கிளென் பிலிப்ஸ். இதோடு மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் அடித்துள்ளார். இரண்டு சதங்கள் ஆக்லாந்து அணிக்காகவும், ஜமைக்கா தாலவாஸ் அணிக்காக இன்னொரு சதமும் அடித்துள்ளார் கிளென் பிலிப்ஸ்.

    இவரது ஸ்ட்ரைக் ரேட் 149.70.

    ஜாஸ் பட்லர் விலகியதன் மூலம் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸுடன் சேர்த்து இங்கிலாந்து வீரர்கள் இல்லாமலேயே அந்த அணி ஆடவுள்ளது.

    பட்லர் இதுவரை 254 ரன்களை 153 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருப்பதால் நிச்சயம் அவரது சேவையை ராஜஸ்தான் இழக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 124 ரன்கள் அடித்தார் பட்லர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அட்டவணையில் ராஜஸ்தான் அணி 5ம் இடத்தில் உள்ளது, செப்டம்பர் 21ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்கள் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரை தொடங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: