பென் ஸ்டோக்ஸை அடுத்து ஜோஃரா ஆர்சர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்.. சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்..

ஜோஃப்ரா ஆர்சர்

ராஜஸ்தான் அணி ஒரு வெற்றி, 3 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

  • Share this:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்சர் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

14வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகித்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர்.

முழங்கை காயத்தால் அவதிப்படும் 26 வயதான ஆர்சர் இங்கிலாந்தில் தங்கியிருக்கிறர். அவர் ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில் போட்டிகளை தவறவிட்டாலும் கூட இறுதிக் கட்டத்தின் ராஜஸ்தான் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்சர் ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளுக்காக இந்தியா வரமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆர்சர், சஸ்செக்ஸ் அணியில் வரும் வாரத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் எனவும் அவர் பிரச்னையின்றி தொடர்ந்து பந்துவீசினால் 2 வாரத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த போட்டியில் அவர் களம் காணுவார் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஃபீல்டிங்கின் போது கை விரலில் காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் ராஜஸ்தான் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
#PBKSvMI | மும்பை பேட்டிங் மீண்டும் சொதப்பல்.. பஞ்சாப் அணிக்கு 2வது வெற்றி..

 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறது. இதன் காரணமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு வெற்றி, 3 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: