இந்த சாதனையை படைக்க ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட் தான் தேவை!

இந்த சாதனையை படைக்க ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட் தான் தேவை!

ரவிச்சந்திரன் அஸ்வின்

இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் போதும் டி20 போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை படைத்து விடுவார்.

  • Share this:
கொரோனா 2வது அலைக்கு மத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், அமகதாபாத், டெல்லி ஆகிய 6 மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 போட்டிகளில் முக்கியமான மைல்கல்லை அடைய உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே ஜெயண்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சீசன் முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்குகிறது. இதில் அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் டி20 போட்டிகளில் 250 விக்கெட்களை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார்.

34 வயதான அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் 139 விக்கெட்களையும், இந்திய அணிக்காக 46 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 6வதாக உள்ளார் அஸ்வின். இந்த வகையில் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இலங்கையின் லசித் மலிங்கா உள்ளார். அவர் ஐபிஎல்-ல் 170 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய மலிங்கா, 4வது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கொல்கத்தா தோற்றதற்கு மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்   


 

ஐபிஎல்-ல் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 160 விக்கெட்களுடன் அமித் மிஸ்ரா 2ம் இடத்திலும், 156 விக்கெட்களுடன் பியூஸ் சாவ்லா 3ம் இடத்திலும், 154 விக்கெட்களுடன் மேற்கு இந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ 4ம் இடத்திலும், 150 விக்கெட்களுடன் ஹர்பஜன் சிங் 5ம் இடத்திலும் உள்ளனர்.

லசித் மலிங்கா தவிர்த்து பிற வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
Published by:Arun
First published: