• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கொல்கத்தாவை வீழ்த்தி கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி

கொல்கத்தாவை வீழ்த்தி கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

  • Share this:
    ஐபிஎல் தொடரின் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் துபாய் மைதானத்தில் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி உடன் வெங்கடேஷ் பார்டன்ர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

    அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். திரிபாதி 34 ரன்னிலும் கேப்டன் இயான் மோர்கன் 2 ரன்னில் அவுட்டாகினர். சற்று அதிரடியாக ரானா 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். பஞ்சாப் 70 ரன்கள் எடுத்திருந்த போது மயங்க் அகர்வால் 40 ரன்னில் அவுட்டானார்.

    நிக்லோஷ் பூரான், எய்டன் மக்ரம், தீபக் ஹோடா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஆனால் கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். பஞ்சாப் இலக்கை விரட்ட கொல்கத்தா ரன் குவிப்பை கட்டுபடுத்த என போட்டி பரபரப்பாகவே அமைந்தது.

    கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் பஞ்சாப் வழக்கம் போல் இறுதியில் சொதப்ப பஞ்சாப் பேட்ஸ்மேன் ஷாருக் கான் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: