• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs RR | அதிரடி காட்டிய ராஜஸ்தான்... பதிலடி கொடுக்குமா பஞ்சாப்?

PBKS vs RR | அதிரடி காட்டிய ராஜஸ்தான்... பதிலடி கொடுக்குமா பஞ்சாப்?

PBKS vs RR

PBKS vs RR

IPL 2021 | Punjab Kings vs Rajasthan Royasl | பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் 185 ரன்களை சேர்த்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 32-வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் 6-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை.

    இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ், ஜஸ்வால் களமிறங்கினார்கள். இந்த ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. பஞ்சாப் பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி மட்டுமே ரன்களை கட்டுப்படுத்தினார். மற்ற பந்துவீச்சாளர்களால் ராஜஸ்தான் அணியின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ராஜஸ்தான் அணி 54 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. எவின் லூயிஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜஸ்வால் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். மிடில் ஆர்டரில் மஹிபால் லோமோர் 17 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ரன்ரேட்டை கிடுகிடுவென உயர்த்தினார். ஆனால் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் ராஜஸ்தான் அணி ரன் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

    POINTS TABLE:

    ராஜ்தான் அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களை வீழ்த்தி மாஸ் காட்டினார். முகமது 3  விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: