#PBKSvMI | 132 ரன்கள் வெற்றி இலக்கு: மும்பைக்கு அதிர்ச்சியளிக்குமா பஞ்சாப் கிங்ஸ்?

#PBKSvMI | 132 ரன்கள் வெற்றி இலக்கு: மும்பைக்கு அதிர்ச்சியளிக்குமா பஞ்சாப் கிங்ஸ்?

ஐபிஎல் 2021

மும்பை அணி 7 ஓவர் முடிவில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிண்டன் டி காக் சுத்தமாக ராசியே இல்லை.  டிகாக் தான் ஓப்பன் செய்வேன்டும் என பிடிவாதமாக களமிறக்குகிறார் ரோஹித். 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். தீபக் ஹூடா பந்துவீச்சில் இறங்கி வந்து ஆடுகிறேன்னு கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். மும்பை 7 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

    இதனையடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். மும்பை அணி பவர் ப்ளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷான் 6 ரன்களுக்கு வெளியேறினார். மும்பை அணி 7 ஓவர் முடிவில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். ரோஹித் சர்மா சூர்யக்குமார் யாதவ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியை கையில் எடுத்த ரோஹித் ஷர்மா தனது 40வது அரைசதத்தை அடித்தார். தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடினார் இதனால் மும்பை அணியின் ரன் ரேட் அதிகரித்தது. சிறப்பாக ஆடி வந்த சூர்யக்குமார் யாதவ் பிஷ்னோய் சுழலில் சிக்கினார்.

    பிஷ்னோய் வீசிய கூக்ளியை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று கெய்லிடம் கேட்ச் கொடுத்து சிக்கினார். மும்பை அணி 16. 1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து பொல்லார்ட் ஆட வந்தார். 18வது ஓவரில் ரோஹித் வெளியேறினார். அதன் பின் ஆட்டம் தலைகீழாக மாறியது மீண்டும் சரிவை நோக்கி சென்றது. பொல்லார்ட் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார். ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில் வெளியேறினார். க்ருணால் பாண்ட்யா 3 ரன்களில் அவுட்டானார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. மும்பை அணி கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமி, பிஷ்னோய் அதிகப்பட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Published by:Ramprasath H
    First published: