IPL 2021 Points Table | ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியல்: கோலி தலைமை ஆர்சிபியின் சரிவின் ஆரம்பமா?

கோலி

ஐபிஎல் 2021-ன் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெற்ற இரு ஆட்டங்களில் முறையே பெங்களூருவை சென்னை அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வீழ்த்தின.

  • Share this:
ஐபிஎல் 2021-ன் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெற்ற இரு ஆட்டங்களில் முறையே பெங்களூருவை சென்னை அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வீழ்த்தின.

இதில் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே முதலிடம் பிடித்தது, டெல்லி கேப்பிடல்ஸ் 2ம் இடம் பிடிக்க, இரு அணிகள்ம் 4 தொடர் வெற்றிகளைப் பெற்ற ஆர்சிபி அணியை 3ம் இடத்துக்குத் தள்ளியது.

முதல் 4 போட்டிகளில் வென்ற ஆர்சிபி அணியின் இந்தத் தோல்வி அந்த அணியின் சரிவின் ஆரம்பமா என்ற கேள்வி எழுந்துள்ளது, ஏனெனில் அன்று கோலி நோ-லாஸில் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெயித்த போது படிக்கல்லின் சதத்தை வெகுவாகப் பாராட்டிப் பேசினார், அப்போது ரசிகர்களை நோக்கி பரிசளிப்பு மேடையில் அவர் கூறும்போது, “ஒவர் உற்சாகம் வேண்டாம், எப்போது வேண்டுமானாலும் அணியின் உத்வேகம் சரியும் வாய்ப்புள்ளது” என்றார். அதனால் இந்தத் தோல்வி ஆர்சிபியின் சரிவின் தொடக்கமோ என்று கேட்க வைக்கிறது.

ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியல்.


ரவீந்திர ஜடேஜா, கடைசி ஓவர் விஸ்வரூப காட்டடியில் 5 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 191 ரன்களைக் குவிக்க பெங்களூரு அணி ஓரளவுக்கு நல்ல நிலையிலிருந்து ஜடேஜாவின் பவுலிங்கில் சுந்தர், மேக்ஸ்வெல், அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸை அடுத்தடுத்து இழந்து தடுமாறி கடைசியில் 122 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத் தோல்வி கண்டது.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டெல்லி அணி பேட் செய்து பிரிதிவி ஷாவின் அரைசதம் ரிஷப் பந்தின் 37 ரன்கள், ஸ்மித் ஆகியோரின் ஆட்டத்தினால் 159 ரன்களை எடுத்தது, தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோ (38) அதிரடி தொடக்கம் கொடுக்க கடைசியில் கேன் வில்லியம்சன் 66 நாட் அவுட் என்று நிற்க கடைசி ஓவரில் 16 ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டம் டை ஆனது.

சூப்பர் ஓவரில் பேர்ஸ்டோவை இறக்காமல் வார்னர் இறங்கி தவறிழைத்தார், அக்சர் படேலைக் கூட 7 ரன்களுக்கும் மேல் அடிக்க முடியாதி போக, டெல்லி கேப்பிடல்ஸ் சூப்பர் ஓவரில் வென்றது.

இதனையடுத்து தலா 5 ஆட்டங்களில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் சென்னை, டெல்லி அணிகள் முறையே முதல் 2 இடங்களை புள்ளிகள் பட்டியலில் பிடிக்க ஆர்சிபி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
Published by:Muthukumar
First published: