• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Playoff: 4 அணிகள் பிளே ஆஃப் போட்டியிலிருந்தாலும் மும்பைதானே வர வேண்டும்! அதானே ஐபிஎல்- ஆனால் மிகமிகக் கடினம்

IPL 2021 Playoff: 4 அணிகள் பிளே ஆஃப் போட்டியிலிருந்தாலும் மும்பைதானே வர வேண்டும்! அதானே ஐபிஎல்- ஆனால் மிகமிகக் கடினம்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ஐபிஎல் 2021 போட்டித்தொடரில் தெளிவாக 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. சிஎஸ்கே, டெல்லி, ஆர்சிபி தகுதி பெற பிளே ஆஃப் சுற்றில் ஒரு இடத்துக்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

  • Share this:
அந்த 4 அணிகளில் புத்துயிர் பெற்ற கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது, ஆனால் மற்ற 3 அணிகளான பஞ்சாப் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் இருக்க, அதே 10 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், 7ம் இடத்தில் மும்பை இந்தியன்ஸும் உள்ளது. இதில் கொல்கத்தாவை பின்னுக்குத்தள்ளி மும்பை இந்தியன்ஸ் வர வேண்டுமெனில் அதன் மீதமிருக்கும் ஆட்டங்கள் மற்ற ஆட்டங்களின் முடிவுகள் ஆகியவை சாதகமாக இருக்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் வாய்ப்புகள்: மும்பை இந்தியன்ஸ் 10 புள்ளிகளுடன் -0.453 என்ற எதிர்மறை நெட் ரன்ரேட்டில் 7ம் இடத்தில் உள்ளது. மும்பைக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. புத்துயிர் பெற்ற ராஜஸ்தான் அணியின் அதிரடி எழுச்சியை மீறி மும்பை ஜெயித்தாக வேண்டும், இதை அதிக ரன்கள், அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று விட்டால், அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தான் அவர்கள் எளிதில் விட்டுக் கொடுத்து விடுவார்கள், கவலையில்லை. ராஜஸ்தான் ராயல்ஸும் பிளே ஆஃப் ஸ்பாட்டுக்கு ஆடுவதால் நியாயப்படி மும்பைக்கு கடினமாகவே இருக்க வேண்டும், ஆனால் உஷ் கண்டுக்காதீங்க, நடுவர் தீர்ப்புகள் உள்ளிட்டவை இருக்கின்றன.

2 வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் கொல்கத்தாவுடன் சரிக்கு சரி நிற்கும் அதாவது கொல்கத்தா தன் இறுதி லீக் போட்டியில் தோற்றால் நெட் ரன் ரேட் விகிதம் வரும் அதில் மும்பைக்கு சாதக நிலை இல்லை. ஆகவே மும்பை இந்தியன்ஸ் 2 போட்டிகளில் பெரிய வெற்றிகளைப் பெற்று கொல்கத்தா அணி தன் கடைசி லீகில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக பயங்கரமாகத் தோற்க வேண்டும் (அப்படி ஆகாது என்று கூறுவதற்கில்லை) இப்படியானால் மும்பை பிளே ஆப் சுற்று வாய்ப்பு பெறும். அக்டோபர் 7ம் தேதி கொல்கத்தா அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி விட்டால் மும்பை, சன் ரைசர்ஸ் போட்டி வீண் தான். ஏனெனில் மும்பை வாய்ப்பு அரோகராதான். ஆகவே பல விட்டுக்கொடுப்புகள் நடந்தால் மும்பை பிளே ஆஃபுக்குத் தகுதி பெறும்.

பஞ்சாப் கிங்ஸ்: கொல்கத்தா போலவே பஞ்சாபுக்கும் ஒரேயொரு போட்டிதான் உள்ளது. ஆர்சிபியிடம் தோற்று 10 புள்ளிகளுடன் உள்ளனர் நெட் ரன் ரேட் மைனஸ் 0.241 என்று 5ம் இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் அப்படியே ஜெயிச்சுட்டாலும் 12 புள்ளிகள்தான் பெறும். அக்டோபர் 7ம் தேதி சிஎஸ்கேவுடன் பஞ்சாபுக்கு போட்டி உள்ளது. கடினம் தான், ஆனால் சிஎஸ்கே அன்று ராஜஸ்தானிடம் வீழ்ந்தது போல் வீழ்ந்து விட்டால் பஞ்சாப் 12 புள்ளிகள் பெற்று மற்ற முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தி விட்டால் சிஎஸ்கேவை வீழ்த்தினாலும் பஞ்சாப் வாய்ப்பு கோவிந்தாதான். ராஜஸ்தானை கொல்கத்தா வீழ்த்தினால் கொல்கத்தா 14 புள்ளிகளைப்பெறும். அனைத்து பிற அணிகளையும் வெளியேற்றிவிடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 போட்டிகள் உள்ளன ஒன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரானது. இன்னொரு போட்டி கொல்கத்தாவுக்கு எதிரானது. மும்பை இந்தியன்ஸை விட்டுக் கொடுக்காமல் வீழ்த்தினால் தன் பிளே ஆஃப் வாய்ப்பை ராஜஸ்தான் தக்கவைக்கும். மும்பை இந்தியன்ஸும் வெளியேறி விடும். இருந்தாலும் கொல்கத்தாவை அடுத்த போட்டியில் வீழ்த்தினால்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிளே ஆஃப் வாய்ப்புப் பெறும். 14 புள்ளிகளைப் பெற வேண்டும் இல்லையெனில் மற்ற அணிகள் முடிவை எதிர்நோக்க வேண்டும். மேலும் ராஜஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தகுதி பெறாத அணிகளை எதிர்கொள்வதால் கடினம் அதிகமாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கடந்த ஞாயிறன்று ஹைதராபாத்தை சொத்தையாக 20வது ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்க வீழ்த்தினாலும் 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தயார் என்ற நிலையில் இருப்பது கொல்கத்தா மட்டுமே. ஒரேயொரு போட்டி ராஜஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது, இதில் வென்றால் நேராக பிளே ஆஃப் என்று கூறி விட முடியாது, ஆனால் வலுவாக இருக்கும். தோற்றால் மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை விட நெட் ரன்ரேட்டில் கொல்கத்தா சிறப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: