பிரெண்டன் மெக்கல்லம் அங்கு இருக்கிறார், உலகின் மிகவும் கொடூரமான ஆக்ரோஷ பேட்ஸ்மென் மெக்கல்லம், அவருடன் 2015 உலகக்கோப்பைப் பின்னடைவுக்குப் பிறகு இங்கிலாந்து அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 நிலைக்குக் கொண்டு சென்ற அதிரடி கேப்டன் இயான் மோர்கன் தலைமையில் உண்மையில் கொல்கத்தா அணி அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடியது.
ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, திரிபாதி, சுனில் நரைன் உள்ளிட்ட அதிரடி வீரர்களுடன்பவுலிங்கில் லாக்கி பெர்கூசன், ஷிவம் மாவி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் என்று கொல்கத்தா அணி ஆல்ரவுண்ட் திறமைகளைக் கொண்டது. இதனால் யுஏயில் வந்திறங்கியது முதல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி இன்று இறுதிக்கு முன்னேறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றிக்குப்பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் கூறியதாவது, “நரைன் சுலபமாக்கி விட்டார். பிரமாதமாக வீசினார் நரைன். இன்னிங்ஸ் முழுதுமே விக்கெட்டுகளை சீரான முறையில் வீழ்த்தினோம். பவுலர்கள் நன்றாகத் தொடங்கினர், சேசிங்கில் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தோம்.
உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருப்பது பெரிய சாதகம். இவர்கள் போட்டிக்கு போட்டி முன்னேற்றம் காட்டுகின்றனர், பேட்டிங்கை எடுத்தால் நீளமான பேட்டிங லைன் அப் வைத்திருக்கிறோம். எங்களுக்கு இங்கு வந்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியிருந்தது அதை சரியாகச் செய்தோம். யுஏஇ-க்கு வந்த பிறகே எங்களுக்கு வாய்ப்பிருக்கிறது என்றே கருதினோம்.
Also Read: RCBvsKKR| Sunil Narine| ஆர்சிபியின் 4 சொக்கத் தங்கங்களை வீழ்த்திய பிறகு 3 ‘பிளாட்டினம்’ சிக்ஸ்- சுனில் நரைன் எனும் அற்புதன்
ஆனால் நாங்கள் ஆடிய கிரிக்கெட் ரகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது. அனைவருமே சிறப்பாக ஆடும் உந்துதலுடன் வந்தனர். நரைன் மிகவும் கூல், அதிகம் பதற்றமடைய மாட்டார், சமநிலையைப் பேணுபவர்” என்றார் இயான் மோர்கன்.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.