• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • அஸ்வின் - மோர்கன் இடையே என்ன பிரச்சனை?- மவுனம் கலைத்த   தினேஷ் கார்த்திக்

அஸ்வின் - மோர்கன் இடையே என்ன பிரச்சனை?- மவுனம் கலைத்த   தினேஷ் கார்த்திக்

வாக்குவாத்த்தில் அஸ்வின்.

வாக்குவாத்த்தில் அஸ்வின்.

ஐபிஎல் கிரிக்கெட் வந்த பிறகே ஜெண்டில்மேன் கிரிக்கெட் என்பது பறந்து வெளியே போய்விட்டது, வெற்றிதான் முக்கியம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு ஆஸ்திரேலிய கல்ச்சர் இப்போது உலகமயமாகியுள்ளது.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  இதனையடுத்து முதலில் அஸ்வின் மன்கடிங் செய்து அதற்கு கடுமையான நியாயங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தார், மன்கடிங் செய்ய கூடாது என்று யாரும் கூறவில்லை, அதற்கு முன் ரன்னரை எச்சரிக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச நாகரீகமான செயல் அதையும் செய்யவில்லை என்பதுதான் பிரச்சனை, அதே போல் த்ரோ போடும் போது கையில், மட்டையில், பேட்ஸ்மென் உடலில் பட்டு பந்து சென்றால் அதற்கு ஓடக்கூடாது, ஏனெனில் த்ரோ போடுபவரின் த்ரோவை தடுத்து விட்டு அதற்கு கூடுதல் ரன் வேறு ஓடமுடியுமா என்பதுதான் கேள்வி.

  நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொல்கத்தாவிடம் செம உதை வாங்கிய போட்டியில் டெல்லி பேட்டிங்கில் சொதப்பி வந்தது, ரன் வருவதே குதிரைக் கொம்பாகி விட ராகுல் திரிபாதியின் த்ரோ ஒன்று ரிஷப் பந்த் மேல் பட்டு செல்ல அதற்கு ஒரு ரன்னை கூடுதலாக ஓட ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ரிஷப் பந்த்தை ரன்னுக்கு அழைத்தார். இது மோர்கனுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் மோர்கனே இப்படித்தானே உலகக்கோப்பையை வென்றார்!! அதனால் அவருக்கு இதைச் சொல்ல உரிமை கிடையாது என்று கூட அஸ்வின் கருதியிருக்கலாம். அதனால் களத்தில் வாக்குவாதம் ஏற்பட தினேஷ் கார்த்திக் விலக்கி விட்டார்.

  அமைதிப்பாலமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக் இந்தச் சம்பவம் பற்றி பிற்பாடு கூறும்போது, “ராகுல் திரிபாதி பந்தை த்ரோ செய்தார், பந்து மேலே பட்டு வெளியே சிறிது தூரம் சென்றது, ரவிச்சந்திரன் ஒரு ரன்னுக்கு அழைத்தார். மோர்கன் இதை விரும்பவில்லை, அதுதான் பிரச்சனை. ஸ்பிரிடி ஆஃப் கிரிக்கெட்டின் படி பேட்ஸ்மென்கள் மேல் பந்து பட்டு செல்லும் போது அதற்கு ரன் ஓடுவது கூடாது என்று நினைப்பவராக மோர்கன் இருக்கலாம்.

  இது ஒரு சுவாரஸியமான டாபிக்தான். எனக்கும் இது தொடர்பாக தனிப்பட்ட கருத்து உள்ளது, அது இப்போது தேவையில்லை, ஆனால் இப்போதைக்கு இந்த விவகாரத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் தினேஷ் கார்த்திக்.

  இதையும் படிங்க: KKR vs DC| சுனில் நரைன், ராணா அபாரம்- டெல்லியை ஊதிய கொல்கத்தா- 4ம் இடத்துக்கு முன்னேற்றம்
  இதையும் படிங்க: ஐபிஎல் 2021: அஸ்வின் - சவுதி தகராறு... - விலக்கி விட்ட தினேஷ் கார்த்திக்

   

  அஸ்வின் பந்து வீச்சு முறையும், அவரது பாடி லாங்குவேஜும் ஒரு சகிப்புத்தன்மையற்ற நிலைக்குச் சென்றதற்கு விராட் கோலி இங்கிலாந்தில் அவரை அணியில் தேர்வு செய்யாமல் இருந்ததும் அதற்கு கூறிய காரணங்களும் சேர்ந்து காரணமாகியிருக்கலாம். அதன் பிறகு மோர்கன் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அஸ்வின் அதைக் கொண்டாடியதும் அஸ்வினைப் பார்க்க பாவமாகவே இருந்தது. பொதுவாக அவர் இப்படிப்பட்டவர் அல்ல என்பதே நம்முடைய புரிதலாக இருந்து வருகிறது.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: