முகப்பு /செய்தி /விளையாட்டு / கொரோனா மருந்துகள், ஆக்சிஜனுக்காக பிசிசிஐ-யிடமிருந்து இழப்பீடு கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு

கொரோனா மருந்துகள், ஆக்சிஜனுக்காக பிசிசிஐ-யிடமிருந்து இழப்பீடு கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு

bcci மீது வழக்கு.

bcci மீது வழக்கு.

கொரோனா நோய்க்கான மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சப்ளைக்காக பிசிசிஐ-யிடமிருந்து இழப்பீடு வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • Last Updated :

இந்த மனுவில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது, இந்த மனு மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. ஏப்ரல் 10-ல் மும்பையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போதுதான் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் தொடங்கியிருந்தது.

இந்த முறை முதல் அலையில் இருந்த கொரோனா வகையை விட இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டது. ஏப்ரல் 12ம் தேதி பகுதியாகவோ முழுதாகவே லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மையமான மும்பையில் போட்டி நடத்தப்பட்டது. டெல்லியிலும் ஐபிஎல் போட்டி நடந்தது. இரண்டு நகரங்களுமே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள்.

ஏப்ரல் 14ம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா பரவலைத் தடுக்க மேலும் கெடுபிடி முடக்கங்களைக் கொண்டு வந்தார். 144 தடைச்சட்டமும் போடப்பட்டது, இதன் படி ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே திறக்க அனுமதி, அதிலும் முழு அத்தியாவசியப் பட்டியல் வெளியாகவில்லை. ஐபிஎல் அத்தியாவசிய சேவைப்பட்டியலில் இடம்பெறவில்லை.

ஏப்ரல் 14முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை இந்தியாவில் உள்நாட்டு நெருக்கடி நிலை போல் இருந்தது. சில கிரிக்கெட் வீரர்களும் கொரோனா பாசிட்டிவ் என்று பாதிக்கப்பட்டனர். தன் வீரர்களை ஆஸ்திரேலியா திரும்ப அழைத்தது. சிலர் ஏற்கெனவே ஆஸி. சென்று விட்டனர். இந்தியாவில் பூமியே அதிரும் அளவுக்கு நாளொன்றுக்கு 3.4 லட்சம் கொரோனா தொற்றுக்கள் உருவாகின. பிற நாடுகள் இந்தியாவுக்கு அவசரம் அவசரமாக ஆக்சிஜன் சப்ளை செய்தன.

இந்திய விமானப்படை உதவியும் நாடப்பட்டது, ஆனால் ஐபிஎல் மட்டும் நடந்து கொண்டிருந்தது. தோனியின் பெற்றோருக்கு கொரோனா. அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் குடும்பத்தைக் கவனிக்க ஐபிஎல் தொடரையே வேண்டாம் என்று சென்று விட்டனர். இந்தியா கொரோனா பாதிப்பில் திரும்ப முடியா ஒரு நிலைக்குச் சென்றபோதும் கூட பிசிசிஐ ஐபிஎல் தொடரை ரத்து செய்யவில்லை, என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்தியாவுக்கு கொரோனா மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிப்பொருட்கள், ஆக்சிஜன் சப்ளைக்காக பிசிசிஐ இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

top videos

    இந்த வழக்கு நாளை மறுநாள் 6ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    First published:

    Tags: BCCI, Court Case, IPL 2021