• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PBKS vs MI: நாங்கள் முடிவுகளைப் பற்றி கவலைபடுவதில்லை: கே.எல்.ராகுல் அடேங்கப்பா..

PBKS vs MI: நாங்கள் முடிவுகளைப் பற்றி கவலைபடுவதில்லை: கே.எல்.ராகுல் அடேங்கப்பா..

 கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கையில் இருந்த மேட்சை பலவிதங்களில் கோட்டை விட்டு விட்டு முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்கிறார் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.

  • Share this:
    முடிவுகளைப் பற்றி இவர் எப்படி கவலைப்பட முடியும்? எந்த முடிவு எப்படி வர வேண்டும் என்ற கவலை வேறு எங்கோவல்லவா இருக்கிறது. நேற்று ரவி பிஷ்னாய் என்ற அருமையான லெக் ஸ்பின் பவுலர் அடுத்தடுத்து ரோகித் சர்மாவையும் சூரியகுமார் யாதவ்வையும் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார், ஹாட்ரிக் பந்து கூட சவுரவ் திவாரிக்கு லீடிங் எட்ஜ் ஆனது. 16/2 என்ற நிலையிலிருந்து தப்புத் தப்பாக வேண்டுமென்றே சில மூவ்களை மேற்கொண்டு பஞ்சாப் தோற்றுப் போனது. ஆனால் பாவம் ரவி பிஷ்னாய் போன்றவர்களுக்கு லாபி இல்லை. ராகுல் சாகர் மும்பை வீரர் என்பதால் இந்திய உலகக்கோப்பை டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

    உண்மையில் ஷ்ரேயஸ் கோபால், ரவி பிஷ்னாய் அருமையான லெக் ஸ்பின்னர்கள், ஒரு புறம் கோலி தன் நண்பர் யஜுவேந்திர சகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் அணித்தேர்வுக்குழு நல்ல திறமைசாலிகளைப் பின்னுக்குத்தள்ளுகிறது. ஷ்ரேயஸ் அய்யருக்குப் பதில் ராகுல் திரிபாதி நல்ல சாய்ஸ்தான், ஆனால் ராகுல் திரிபாதிக்காக பேசுபவர்கள் யாரும் இல்லையே?

    கடைசியில் ஹர்திக் பாண்டியாவுக்கு விட்ட கேட்ச், ஷமி ஷார்ட் பிட்சாக வீசக்கூடிய பவுலரா? ஆனால் அவரோ சொல்லி சொல்லி ஷார்ட் பிட்சாக தேங்காய் உடைத்து எங்கு 20வது ஓவருக்கு மேட்ச் சென்று விடுமோ என்று பயந்து 19வது ஓவரிலேயே மேட்சை முடித்து விட்டார். இதில் என்ன ஃபைட் இருக்கிறது, கிரிக்கெட் ஆட்டம்தான் எங்கு இருக்கிறது?

    இதில் ராகுல் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூறியதுதான் தமாஷ், “குட் ஃபைட் ஃப்ரம் பவுலர்ஸ்” அதாவது பவுலர்கள் நன்றாக எதிர்த்துப் போராடினார்களாம், எங்கே, எப்போது?

    ராகுல் சொல்வதையே பார்ப்போம், “பவுலர்கள் நல்ல போராட்டக்குணத்தை வெளிப்படுத்தினர். ரன்கள் போதவில்லை. நாங்கள் விளையாடியதிலேயே நல்ல பிட்ச் இதுதான், 170 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அடுத்த 3 போட்டிகள் உண்மையில் சுவாரசியமானதுதான். இந்தத் தொடரில் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க எங்களால் முடியவில்லை.

    ஒரு சமயத்தில் ஒரு போட்டி என்றுதான் பரிசீலித்து ஆடுகிறோம். நாங்கள் முடிவுகளைப் பற்றி கவலைப்படவில்லை, ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவதுதான் பிடித்திருக்கிறது. யுஏஇயில் நாங்கள் ஆடிய அனைத்துப் போட்டிகளும் கடைசி வரை விறுவிறுப்பாகவே சென்றுள்ளது” என்கிறார் கே.எல்.ராகுல்.

    முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லையா? அல்லது முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதேயில்லையா? என்று ராகுலிடம் யாராவது கேட்டால் நல்லது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: