ஒரு பந்து கூட சந்திக்காமல் டக் அவுட் ஆன நிகோலஸ் பூரான்: வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

ஒரு பந்து கூட சந்திக்காமல் டக் அவுட் ஆன நிகோலஸ் பூரான்: வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

நிகோலஸ் பூரான்

இந்த சீசனில் நிகோலஸ் பூரானுக்கு இது 3வது டக் அவுட் ஆகும். அவர் ஆடியுள்ள 4 போட்டிகளில் இது 3வது டக் அவுட் என்பது பரிதாபத்திற்குரியதாக அமைந்தது.

  • Share this:
நடப்பு ஐபிஎல் சீசன் பஞ்சாப் அணிக்கு மிக கடினமான ஒரு சீசனாக அமைந்துள்ளது என்றால் அதை விட கொடுமையான ஒரு சீசனாக பஞ்சாப் அணியில் இடம்பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் மேற்கு இந்திய தீவுகள் வீரர் நிகோலஸ் பூரானுக்கு மாறியிருக்கிறது. பஞ்சாப் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 3 மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேறிய நேற்றைய மோதலில் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் அவரது முடிவு சிறிது நிமிடங்களிலேயே பேக் ஃபயர் ஆனது. பஞ்சாப் அணி 10 விக்கெட்களையும் இழந்து 120 ரன்களுக்கு சுருண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து சேஸ் செய்து இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் பஞ்சாப் இன்னிங்ஸின் போது பேட் செய்ய வந்த நிகோலஸ் பூரான் எடுத்த எடுப்பிலேயே கிறிஸ் கெய்ல் அடித்த ஒரு ஷாட்டுக்கு தேவையில்லான ரன்னுக்காக ஓடினார். அவர் எல்லைக்கோட்டை அடைவதற்கு ஒரு சில இஞ்ச் இருந்த போது சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னரின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன் மூலம் ஒரு பந்து கூட சந்திக்காமல் ‘கோல்டன் டக்’ ஆன வீரர் என்ற பெயரை எடுத்தார் நிகோலஸ் பூரான்.இந்த சீசனில் நிகோலஸ் பூரானுக்கு இது 3வது டக் அவுட் ஆகும். அவர் ஆடியுள்ள 4 போட்டிகளில் இது 3வது டக் அவுட் என்பது பரிதாபத்திற்குரியதாக அமைந்தது.

ஹர்பஜன் சிங் காலில் தொட்டு வணங்கிய சுரேஷ் ரெய்னா: காரணம் என்ன?


மேலும் இந்த ரன் அவுட் மூலம் நிகோலஸ் பூரான் ஒரு புதிய ஐபிஎல் சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார். ஒரு சீசனில் எந்த பந்தையும் சந்திக்காமலும், ஒரு பந்திலும், இரண்டு பந்திலும் டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு பூரான் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

தொடர்ந்து டக் அவுட் ஆகி வரும் நிகோலஸ் பூரானை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். நேற்றிலிருந்து மீம்களாக தெறிக்க விடுகின்றனர்.

வார்னரின் இன்ஸ்டா பதிவு


இது போதாது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும் நேற்றைய போட்டியில் பூரானை துல்லியமான த்ரோ மூலம் டக் அவுட் செய்த டேவிட் வார்னரும் வம்புக்கு இழுத்துள்ளார். வார்னர் தனது இன்ஸ்டாவில் பூரானை கேலி செய்து பதிவிட்டுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.
Published by:Arun
First published: