• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் போட்டிகளில் கெடுபிடிகளாக மாறும் புதிய விதிமுறைகள்

ஐபிஎல் போட்டிகளில் கெடுபிடிகளாக மாறும் புதிய விதிமுறைகள்

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

அமீரகத்தில் ஐபிஎல் டி20தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சில விதிகளை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது

  • Share this:
    2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன.

    இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் கொரோனா அச்சம் காரணமாக புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது பிசிசிஐ.

    அதில் முக்கியமானது பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்டால், பந்து அரங்கிற்கு வெளியே சென்றாலும், மைதானத்தின் எல்லைக் கோட்டைவிட்டு இருக்கைப்பகுதிக்குச் சென்றால் 4-வது நடுவர் மூலம் புதிய பந்து மாற்றப்படும்.

    Also Read: லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?

    மைதானத்தின் இருக்கைப் பகுதியிலிருந்து எடுத்துவரப்படும் பந்து சானிடைஸ் செய்தும், ஆல்கஹால் துணி கொண்டு துடைக்கப்பட்டு மறுபடியும் பயன்படுத்தப்படும்.பிசிசிஐ நடத்திய ஆய்வின்படி, பந்தின் மூலம் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு மிகக் குறைவுதான். இருந்தாலும், அதனால் பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கழிவறைகள், குளியல்அறை போன்றவற்றில் வீரர்கள், ஊழியர்கள், எச்சில் துப்புதல், காரி உமிழ்தல், தும்முதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

    8 அணிகளைச் சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் 6 நாட்கள்தனிமையில் இருக்க வேண்டும், அந்த காலகட்டத்தில் 3 முறை எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும். அதன்பின்புதான் பயோ-பபுள் சூழலுக்குள் செல்ல முடியும்.

    வீரர்கள் கோல்ப் மைதானத்துக்கு செல்லலாம். ஆனால், 24 மணிநேரத்துக்கு முன்பாக,ஐபிஎல் மருத்துவ அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கோல்ப் மைதானம் முழுமையாக, ஐபிஎல் வீரர்கள் பயன்படுத்த எடுக்கப்பட்டுள்ளதால் அங்கு வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கோல்ப் கிளப்பில் இருக்கும் மதுபான விடுதி, ரெஸ்டாரன்ட், காபே, உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோல்ப் லாக்கர் அறையையும்பயன்படுத்த வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோல்ப் மைதானத்தில் உள்ள குளியல் அறையையும் பயன்படுத்த வீரர்களுக்கு தடை உள்ளது.

    அதே போல் குளிர்பான இடைவேளைகளில் தனித்தனி குளிர்பான பாட்டில்களைத்தான் வீரர்கள் பயன்படுத்த வேண்டும், ஒருவர் குடித்த மீதியை மற்றொரு வீரர் பயன்படுத்தக் கூடாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: