• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • MI vs KKR | ஆரம்பத்தில் அதிரடி, இறுதியில் தடுமாற்றம்... கொல்கத்தாவிற்கு 156 ரன்கள் இலக்கு

MI vs KKR | ஆரம்பத்தில் அதிரடி, இறுதியில் தடுமாற்றம்... கொல்கத்தாவிற்கு 156 ரன்கள் இலக்கு

MI vs KKR

MI vs KKR

IPL 2021 | கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 34-வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலமாக அமைந்தது.

    இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினார்கள். நிதானமாக விளையாடிய இந்த ரன்குவிப்பில் ஈடுபட்டனர். மும்பை அணி 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 33 ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் டி-காக் 55 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இவர்கள் இருவரையும் அடுத்தடுத்து பிரசித் கிருஷ்ணா அவுட்டாக்கி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

    மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பயிதால் அந்த ரன்எடுக்க தடுமாறியது. இஷான் கிஷான் (14), பொல்லார்டு (21), குர்ணால் பாண்டியா (12) ரன்களில் அவுட்டாகினர். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய மும்பை இறுதி ஓவர்களில் ரன் குவிக்க திணறியது. இதனால் 20 ஒவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளைாயடி வருகிறது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: