சிறப்பான சம்பவம்: ஒற்றை நபராக சுழண்டு அடித்த பொல்லார்டு - 219 ரன்களை சேஸ் செய்த மும்பை

பொல்லார்டு

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 27-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளான மும்பைக்கும் சென்னைக்கும் இடையே போட்டி நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் கடந்த கோப்பையை வென்ற மும்பை அணி இந்த முறை தடுமாற்றத்துடனே விளையாடிவருகிறது. 6 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தவருகிறது. இந்தநிலையில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  முதலில் பேட் செய்த சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் முடிவில் 218 ரன்களைக் குவித்தது. அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடி 75 ரன்களைக் குவித்தார். அதனையடுத்து, 219 ரன்கள் என்ற கடின இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டிகாக் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

  அவரைத் தொடர்ந்து களமிங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிகாக்கும் ஆட்டமிழந்தார். 9 ஓவரில் 81 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. அதனையடுத்து களமிறங்கிய கைரன் பொல்லார்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பொல்லார்டு, குர்ணால் பாண்டியா இணை சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒருபுறம் நிதானமாக ஆடி குர்ணால் பாண்டியா ரன்களை எடுக்க, மறுபுறம் பொல்லார்டு சூறாவளியாக ஆடினர். 17 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார்.

  குர்ணால் பாண்டியா 32 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அவரும் 16 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் பொல்லார்டு தளறாமல் அடித்து விளையாடினார். யாருடைய பந்துவீச்சும் அவருடைய ஆட்டத்திலிருந்து தப்பவில்லை. இறுதி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நிகிடி பந்துவீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் 5 பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டு ரன்களை எடுத்தார் பொல்லார்டு.

  34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் பொல்லார்டு. அதன்மூலம், 7 போட்டிகளில் மும்பை அணி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னை அணிக்கு இந்தப் போட்டி இரண்டாவது தோல்வியாக அமைந்தது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: