தேவையில்லாத ரன் அவுட்.. பேர்ஸ்டோ ஹிட் விக்கெட்.. கைநழுவிய வாய்ப்பு - மும்பைக்கு இரண்டாவது வெற்றி

மும்பை இந்தியன்ஸ்

பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது

 • Share this:
  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து குவிண்டன் டி காக், ரோஹித் ஷர்மா மும்பை இன்னிங்ஸை தொடங்கினர். பவர் ப்ளே ஓவர்களில் ரோஹித், டி காக் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 6 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்தது.

  இதனையடுத்து 7-வது ஓவரை வீச விஜய் சங்கரை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. விஜய் வீசிய 3-வது பந்தில் ரோஹித் ஷர்மா விராட் சிங் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோஹித் ஷர்மா 32 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். டிகாக், சூர்யகுமார் இருவரும் பவுண்டரி சிக்ஸர்களை விளாசினர். மீண்டும் தனது இரண்டாவது ஓவரை வீச விஜய் சங்கர் வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சூர்ய குமார் யாதவ் ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். விஜய் சங்கர் ஸ்லோவாக வீசிய அடுத்த பந்தை லெக் ஸைடு அடிக்க முயன்ற சூர்ய குமார் யாதவ், விஜய் வசமே சிக்கினார். 10 ரன்களுடன் சூர்ய குமார் யாதவ் வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார்.

  தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குவிண்டன் டி காக், முஜிபுர் ரஹ்மான். பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டி காக் 40 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பொல்லார்ட் களமிறங்கினார். இதற்கிடையில் இஷான் கிஷன் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.ஓவர்கள் குறைவாக இருந்ததால் ஹர்திக் வந்ததில் இருந்தே அதிரடியாகவே விளையாடினார். 19-வது ஓவரை கலீல் வீசினார்.

  இந்த ஓவரில் பொல்லார்ட் கொடுத்த கேட்சை விஜய் சங்கர் வீணடித்தார். ஆனால் இவரது அடுத்த சில பந்துகளில் ஹர்திக் பாண்டியா வெளியேறினார். இதனையடுத்து க்ருணால் பாண்ட்யா களமிறங்கினார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் பொல்லார்ட் இரண்டு சிக்ஸர்களை விளாச மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

  இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத அணிக்கு ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் அடக்கி வாசித்த பேர்ஸ்டோ அடுத்த ஓவர்களில் இருந்து அதிரடி காட்டினர். ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசினார். டேவிட் வார்னர் ஸ்ட்ரைக் ரோட்டேட் செய்துக் கொடுத்தார். பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரை க்ருணல் பாண்டியா வீசினார்.

  43 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார் பேர்ஸ்டோ. இதனையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். ராகுல் சஹர் பந்துவீச்சில் பொல்லார்ட் வசம் கேட்சாகி மனிஷ் பாண்டே வெளியேறினார். இதனையடுத்து இளம் வீரரான விராட் சிங் , டேவிட் வார்னருடன் பார்ட்னர் ஷிப் அமைத்தனர். 12-வது ஓவரில் தேவையில்லாத ரன் அவுட்டில் சிக்கினார் வார்னர். இதனால் ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது.

  இதனையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். வார்னர் விக்கெட்டுக்கு பின்னர் நீண்ட நேரமாக பவுண்டரி வரவில்லை. இதனையடுத்து க்ருணால் பாண்டியா வீசிய 16-வது ஓவரில்  விஜய் சங்கர் இரண்டு சிக்ஸர்களை விரட்டி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தார்.  அடுத்த ஓவரை பும்ரா கட்டுக்கோப்பாக வீசி ஃபிரஷர் கொடுத்தார்.  18-வது ஓவரில் ரஷித் கான் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். 19-வது ஓவரை பும்ரா வீசினார். சன்ரைசர்ஸ் நம்பிக்கை கொடுத்த விஜய் சங்கர் தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

  கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்திலே புவனேஷ்வர் குமாரை க்ளீன் போல்ட் செய்தார் ட்ரெண்ட் போல்ட். சன்ரைசர்ஸ் அணிக்கு 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முடிவில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
  Published by:Ramprasath H
  First published: