IPL 2021 | ஹர்திக் பாண்டியா இருக்கும் பார்மில் சான்ஸே இல்ல; மும்பை இந்தியன்சை வீழ்த்த முடியுமா? - கவாஸ்கர் சவால்

சுனில் கவாஸ்கர்

மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் ஹாட்ரிக் கப் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்க, சுனில் கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்கப்போகும் அணி யார்? என்று சவால் விடுத்துள்ளார்.

  • Share this:
    மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் ஹாட்ரிக் கப் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்க, சுனில் கவாஸ்கர் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்கப்போகும் அணி யார்? என்று சவால் விடுத்துள்ளார்.

    அதுவும் ஹர்திக் பாண்டியா இப்போது இருக்கும் பார்மில் சான்சே இல்லை என்கிறார் சுனில் கவாஸ்கர். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்திய வீரர்கள் இருக்கும் பார்ம் பெரியது என்கிறார் சுனில்.

    யுஏஇ-யில் நடந்த ஐபிஎல் 2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது, அதனால் இந்த முறையும் தொடக்கத்திலேயே சாம்பியன் அணி என்ற சாதக நிலையை மும்பை அடைந்துள்ளது என்றார் கவாஸ்கர்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது கடினம் என்று நினைக்கிறேன். இந்த அணி வீரர்கள் பார்முக்கு வந்ததை நாம் பார்த்தோம். இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், பேட்டிங்கை டி20, ஒருநாள் போட்டிகளில் பார்த்தோம்.

    குறிப்பாக ஹர்திக் பாண்டியா பேட்டிங் பவுலிங் பார்முக்கு திரும்பியது மிக முக்கியமானது. இந்திய கிரிக்கெட்டுக்கும் முக்கியமானது அவர் 9 ஓவர்களை வீச வேண்டும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில காலம் உள்ளது, அதற்குள் ஹர்திக் ரெடியானால் அது இந்திய அணிக்கு இரும்பு பலம்.

    என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.

    ஹர்திக் பணிச்சுமை குறைக்கப்படும் என்று விராட் கோலி கூறினார் , அவரது பணிச்சுமையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் விராட் கோலி யார் என்று சேவாக் காட்டம் காட்ட 3வது ஒருநாள் போட்டியில் 9 ஓவர்களை வீசினார் ஹர்திக் பாண்டியா.
    Published by:Muthukumar
    First published: