• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • MI vs KKR IPL 2021:மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா - நேருக்கு நேர்- 11 வீரர்கள் யார்?

MI vs KKR IPL 2021:மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா - நேருக்கு நேர்- 11 வீரர்கள் யார்?

மும்பை இண்டியன்ஸ் - கேகேஆர்

மும்பை இண்டியன்ஸ் - கேகேஆர்

மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2021 போட்டியில் இன்று இருஅணிகளிலும் விளையாடும் லெவன் யார் யார்? நேருக்கு நேர் மோதல் உள்ளிட்ட விவரங்கள் இதோ.

  • Share this:
    கடந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லை, ஹிட்மேன் ரோகித் சர்மா இல்லை. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 23/4 என்ற நிலையிலிருந்து இன்னொரு பவுலர் மும்பையில் இல்லாததால் ருதுராஜ் கெய்க்வாட் ஹீராயிக் இன்னிங்ஸ் மூலமும் டிவைன் பிராவோவின் 7 பந்து 23 அதிரடி மூலமும் 156 ரன்களை எடுக்க மும்பை இண்டியன்ஸ் திணறி தோல்வி தழுவியது.

    குவிண்டன் டி காக்கிற்கு தோதான ஓப்பனர் மும்பையில் இல்லை, அன்மோல்பிரீத் சிங் இவர் யார் என்றே தெரியவில்லை. திடீரென ஒரு சிக்ஸ் பயங்கரமாக அடிக்கிறார் பிறகு ஆட்டமிழந்து விடுகிறார், அதே போல் சவுரவ் திவாரி இந்த அணியில் இடம்பெற வேண்டிய ஆளே இல்லை, அன்று அவர் எடுத்த அரைசதத்தை நம்ப முடியாது.

    மும்பை அணி உத்தேச லெவன்: டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரவ் திவாரி, கெய்ரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாகர், ஜஸ்பிரித் பும்ரா

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயான் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், லாக்கி பெர்கூசன், வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரசல்.

    POINTS TABLE:

    அன்று ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக ஆந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி கலக்கினர், 360 டிகிரி வீரர் டிவில்லியர்ஸை லெக் ஸ்டம்ப் யார்க்கரில் கிளீன் பவுல்டு செய்து கோல்டன் டக் அடிக்கச் செய்தார் ரசல். ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர் 10 ஒவர்களில் 93 ரன்கள் எடுத்து வெற்றி பெறச் செய்தனர்.

    நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் 28 முறை மோதியுள்ளன. இதில் மும்பை ஆதிக்கம் செலுத்தி 22 வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா 6 முறையே மும்பையை வென்றுள்ளது. இன்று இந்த புள்ளி விவரம் மாறும் என்று எதிர்பார்க்கலாம். கடைசியாக இந்தியாவில் நடந்த இந்த ஐபிஎல் தொடரில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: