• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs MI - நேருக்கு நேர்- யார் பெஸ்ட்? தோனியா, ரோகித் சர்மாவா?

CSK vs MI - நேருக்கு நேர்- யார் பெஸ்ட்? தோனியா, ரோகித் சர்மாவா?

ரோகித் - தோனி

ரோகித் - தோனி

ஐபிஎல் 2021 யுஏஇ சுற்றுகள் தொடங்கவுள்ளது, நாளை மறுநாள் தோனி தலைமை சிஎஸ்கே அணிக்கும் ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. அனல்பறக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டிகளின் விவரங்களைப் பார்ப்போம்:

  • Share this:
    ஐபிஎல் 2021 யுஏஇ சுற்றுகள் தொடங்கவுள்ளது, நாளை மறுநாள் தோனி தலைமை சிஎஸ்கே அணிக்கும் ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. அனல்பறக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டிகளின் விவரங்களைப் பார்ப்போம்:

    மும்பை இந்தியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல த்ரில் போட்டிகளி உயர்தர கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளனர். நாளை மறுநாள் போட்டியும் சவால்களுக்குக் குறைவில்லாமல் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட போட்டிகளைப் பார்த்தோமானால் மும்பை இந்தியன்ஸுக்குத்தான் லேசாக சாதக சூழ்நிலை இருக்கிறது. சிஎஸ்கே அணியை 19 முறை மும்பை வீழ்த்தியுள்ளது. தோனி அணி 12 முறைதான் வென்றுள்ளது.

    இந்த முறை இந்தியாவில் நடந்த முதல் சுற்று ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடிய டுபிளெசிஸ், ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோர் சில போட்டிகளில் இப்போது ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், மொயின் அலி தோனி போன்றவர்கள்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை முடிவு செய்கின்றனர்.

    மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, டி காக், சூரியகுமார் யாதவ், இசான் கிஷன், ஹர்திக் பாண்டியா, போலார்ட், குருணால் என்று அடிதடி வீரர்கள் ஏராளம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங் உள்ளது, ஷர்துல், தீபக் சாகர், லுங்கி இங்கிடி, மொயின் அலி, ஹேசில்வுட் உள்ளனர். வெற்றிகரமான ஐபிஎல் விரட்டல்களில் கடைசி 10 ஒவர்களில் விளாசிய ரன்கள் இதோ:

    2021-ல் டெல்லியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. போலார்டு 34 பந்துகளில் 87 ரன்கள் விளாசித்தள்ளினார். 2019-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை விரட்டும்போது கடைசி 10 ஓவர்களில் 133 ரன்களை விரட்டியது இப்போதும் போலார்டு 31 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார்.

    இந்த முறை யுஏஇ லெக்கில் மும்பை இந்தியன்ஸ் வழக்கமான பலத்துடன் திகழ, சிஎஸ்கே அணி கொஞ்சம் பலவீனமாகத் தெரிகிறது, ஆனால் தோனி எனும் யானைபலம் பலவீனத்தை பலமாக மாற்றும் சக்தி எனவே இன்னொரு சவால் போட்டியைக் காணலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: