டி காக்கை சோதிக்கும் சேப்பாக்கம் : பவர்ப்ளேயில் தடுமாறும் மும்பை

குவிண்டன் டி காக்

 • Share this:
  நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  இதனையடுத்து ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிண்டன் டி காக் சுத்தமாக ராசியே இல்லை. நான் டிகாக் தான் ஓப்பன் செய்வேன் என பிடிவாதமாக களமிறக்குகிறார் ரோஹித். சேப்பாக்கம் க்ரவுண்டுக்கு எனக்குமான ராசிய நான் மாற்றியே தீருவேன் என ஒவ்வொரு முறை போராடுகிறார் டிகாக்.

  ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான முதல்போட்டியின் போது குவிண்டன் டி காக் குவாரண்டைனில் இருந்ததால் கிறிஸ் லின் களமிறங்கினார். சேப்பாக்கம் பிட்ச் அப்படி இப்படி இருந்தாலும் கிறிஸ் லின் 49 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். டி காக் குவாரண்டைனில் இருந்து வந்ததுக்கு பிறகு கிறிஸ் லின் பென்ச்-ல் உட்கார வைக்கப்பட்டார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் களமிறங்கினார். ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி பந்தில் 2 ரன்களில் கேட்சாகி வெளியேறினார்.

  அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குவிண்டன் டி காக் 39 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் தான். அந்த மேட்ச்ல டிகாக் ஆடுலனா மும்பைக்கு அந்த 150 ரன்கள் வந்து இருக்காது. அதே நம்பிக்கையில் மூன்றாவது மேட்ச் ஆடினார். ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் கூட 2 ரன்களில் நடையைக் கட்டினார்.

  இன்றைய போட்டியில் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். தீபக் ஹூடா பந்துவீச்சில் இறங்கி வந்து ஆடுகிறேன்னு கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். மும்பை 7 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். மும்பை அணி பவர் ப்ளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷான் 6 ரன்களுக்கு வெளியேறினார்.
  Published by:Ramprasath H
  First published: