IPL IPL 2021 MS DHONI NEVER WISHES HIS TEAMMATES GOOD LUCK BEFORE A MATCH REVEALS PRAGYAN OJHA MUT
தோனி சக வீரர்களுக்கு ‘ஆல் த பெஸ்ட்’, ‘குட் லக்’ என்றெல்லாம் வாழ்த்துக் கூற மாட்டார்: ரகசியம் உடைக்கும் பிராக்யன் ஓஜா
தோனி
தோனி ஒரு கேப்டன் கூல். இதன் பெயரில் அணி வெற்றி பெறுவது பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார் என்ற வகையிலான பெயர் எடுத்தவர். ஒருமாதிரி அது அது தானாக நடந்தால் வெற்றி தானாக வரும் என்பதே தோனியின் கணக்கு.
தோனி ஒரு கேப்டன் கூல். இதன் பெயரில் அணி வெற்றி பெறுவது பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார் என்ற வகையிலான பெயர் எடுத்தவர். ஒருமாதிரி அது அது தானாக நடந்தால் வெற்றி தானாக வரும் என்பதே தோனியின் கணக்கு.
அதனால்தான் அவர் ஆட்டத்துக்கு முன்பு குட்லக் சொல்வது, கங்கிராஜுலேஷன் மேட் போன்ற சாதாரண உத்வேக வார்த்தைகளைக் கூட அவர் கேப்டனாகப் பயன்படுத்த மாட்டார் என்கிறார் இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா.
ஆனால் இது தோனியின் செண்டிமெண்ட் என்கிறார் ஓஜா. எப்படி சச்சின் டெண்டுல்கர் களத்தில் இறங்கும் முன் இடது கால் பேடை முதலில் கட்டுவாராம். 2011 உலகக்கோப்பை இறுதியின் போது யாரும் இடத்தை விட்டு நகரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவே போடும் அளவுக்கு சச்சின் செண்டிமெண்ட் பிடித்தவர் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பிராக்யன் ஓஜாவுக்கும் தோனிக்கும் இடையே களத்துக்கு வெளியேயும் நல்ல நட்புறவு உள்ளதை ஒருமுறை தன் வீட்டுக்கு வந்த தோனி முதல் நாள் செய்த சிக்கனே போதும் என்று பெருண்டன்
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் டுடே ஊடகத்துக்கு பிராக்யன் ஓஜா கூறியதாவது:
எம்.எஸ்.டி. (தோனி) ஒரு போதும் சக வீரர்களிடத்தில் போட்டிக்கு முன்பாக குட்லக் என்றோ ஆல் த பெஸ்ட் என்றோ கூறியதில்லை. ஏனெனில் அவ்வாறு அவர் சில வீரர்களுக்கு கூறியிருக்கிறார், ஆனால் அது வேறு விதமாக முடிந்ததால், அவர் அந்த குட்லக், ஆல் த பெஸ்ட் சொல்லும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
ஒரு முறை நாங்கள் வீரர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் இருக்கும் செண்டிமெண்ட்ஸ், நம்பிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அப்போதுதான் தோனி சொன்னார், தான் யாருக்கும் குட்லக் என்றோ ஆல் த பெஸ்ட் என்றோ கூறுவதில்லை ஏனெனில் அதற்கு மாற்றாக நிகழ்ந்து விட்டால் அபத்தமாக இருக்கும் என்று அவர் கருதினார்.
யாரும் தோனியிடமிருந்து ஆசிகளையும் எதிர்பார்த்ததும் இல்லை. எதிரணி வீரர்கள் உட்பட.
இவ்வாறு கூறினார் பிராக்யன் ஓஜா.
ஐபிஎல் 2021-ல் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை காலி செய்தது, இன்று வான்கடே ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியைச் சந்திக்கிறது, வென்றால் ஹாட்ரிக் வெற்றியைச் சாதிக்கும்.