ஜடேஜாவை மிமிக்ரி செய்து தோனி ஜாலி

இடது புறம் தோனி வெறும் கையால் வாள் போல் சுழற்றி காட்டுகிறார்.

ஜடேஜா பேட்டிங்கில் சதம் அல்லது அரைசதம் எடுக்கும்போது அல்லது சாதிக்கும்போது மட்டையை வாள் போல் சுழற்றுவார், இது அவரது மேனரிசம், உண்மையில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சிக்சர் அடித்து வென்ற தோனி அப்படித்தான் வாள் போல் மட்டையைச் சுழற்றினார்.

 • Share this:
  ஆனால் இது பெரும்பாலும் ஜடேஜா ஸ்டைல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ரத்து ஆனதையடுத்து வீரர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பொழுதைக் கழிக்கின்றனர், சில வீரர்கள் கொரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டுவது, ஆக்சிஜன் செறிவூக்கிகள் வழங்குவது, கொரோனா பாதித்தவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் புரிவது என்று தங்களை சமூக சேவையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் ஞாயிறன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ‘தல’ தோனி, தன் அணியின் சகவீரர் ஜடேஜா மட்டையை வாள் போல் எப்படி சுழற்றுவார் என்பதை மட்டை இல்லாமல் தன் வெறுங்கையை அதே போல் வாள் சுழற்றுவது போல் சுழற்றி  இமிடேட் செய்து காட்டினார்.

  சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் இந்த தோனி மிமிக்ரி வீடியோ வைரலாகி வருகிறது.

  தோனி


  ஐபிஎல் 2021-ல் ஜடேஜா பிரமாதமான ஆல்ரவுண்ட் பார்மில் இருக்கிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று கலக்கினார். ஒருமுறை 4 கேட்ச்களைப் பிடித்து விட்டு 4 என்று கையைக் காட்டி அணித்தேர்வுக்குழுவுக்கு தன்னை அணியில் எடுக்க வலியுறுத்துமாறு சுவாரஸ்யம் கூட்டினார்.

  தோனிக்கும் ஜடேஜாவுக்குமான நட்பு மிகவும் நெருக்கமானது, எல்லா வீரர்களுடனும் பாரபட்சமின்றி பழக்கக் கூடியவர்தான் தோனி என்றாலும் ஜடேஜா அவருக்கு ஸ்பெஷல்தான்.

  7 ஆட்டங்களில் அவர் இந்த ஐபிஎல் தொடரில் 131 ரன்களை எடுத்துள்ளார், ஆனால் ஸ்ட்ரைக் ரேட் அபாரமான 161 ஆகும். 6 விக்கெட்டுகளை 6.70 என்ற சிக்கன விகிதத்தில் எடுத்துள்ளார்.

  தோனி, ஜடேஜா


  இங்கிலாந்தில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். ஜூன் 18ம் தேதி இந்த இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கேன் வில்லியம்சனா, விராட் கோலியா என்பது போன்று இப்போது அந்தப் போட்டிக்குப் பில்ட் அப் கொடுக்கப்படுகிறது.

  ஜடேஜா


  இங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பையை தவறவிட்ட நியூஸிலாந்து அணி இந்த முறை டெஸ்ட் உலகக்கோப்பையை நழுவ விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர் உள்ளன, எனவே இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

  இதில் ஜடேஜா வாள்சுழற்ற வேண்டும். என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐபிஎல் 2021-ல் தோனி தலைமை சிஎஸ்கே 7 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது, முதலிடத்தை இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் தட்டிச் சென்றது.
  Published by:Muthukumar
  First published: