• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் 2021: என்ன ‘தல’ பழைய பார்முக்கு வந்துட்டீங்களா?- சிக்ஸர்களாக விளாசிய தோனி

ஐபிஎல் 2021: என்ன ‘தல’ பழைய பார்முக்கு வந்துட்டீங்களா?- சிக்ஸர்களாக விளாசிய தோனி

வலையில் தோனி.

வலையில் தோனி.

எமிரேட்ஸில் ஐபிஎல் 2021-ன் மீதிப் போட்டிகள் அபுதாபி, ஷார்ஜா, துபாய் மைதானங்களில் நடக்கவிருக்கிறது, இதற்காக முன் கூட்டியே யுஏஇ வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, இதில் தோனி மீண்டும் தன் பழைய சிக்சர்கள் பாணிக்குத் திரும்பியுள்ளார் தோனி.

  • Share this:
    எமிரேட்ஸில் ஐபிஎல் 2021-ன் மீதிப் போட்டிகள் அபுதாபி, ஷார்ஜா, துபாய் மைதானங்களில் நடக்கவிருக்கிறது, இதற்காக முன் கூட்டியே யுஏஇ வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, இதில் தோனி மீண்டும் தன் பழைய சிக்சர்கள் பாணிக்குத் திரும்பியுள்ளார் தோனி.

    நெட் செஷனில் கேப்டன், தல தோனி


    தோனி வலைப்பயிற்சியில் பேட்டிங்கில் இறங்கி பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிட்டார், இறங்கி வந்து இறங்கி வந்து அடித்து நொறுக்கினார்.

    40 வயதாகும் தோனி முன்னைப்போல் சிக்சர்களை அடிப்பதில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு பெருத்த சோகமாக இருந்து வருகிறது , இறங்கி வந்து லொட்டு வைப்பதாக தோனியின் பேட்டிங் மாறிப்போனது.

    வலைப்பயிற்சியில் மணி பார்க்கும் தல தோனி.


    இதோடு அல்லாமல் தான் இந்த வயதிலும் ஃபிட் என்பதைக் காட்ட ரன்களை வேகமாக ஓடி எடுக்கிறேன் பார் என்று சிக்சர், பவுண்டரி பந்துகளை கூட தள்ளி விட்டு ஒன்று இரண்டு என்று மூச்சிரைக்க அவர் ஓடுவதைப் பார்த்தால் பரிதாபமாகவே இருக்கும்.

    இதனால் அவரது சிக்சர்கள் காணாமல் போயின. தோனி என்றால் லொட்டு வைப்பார், ஒன்று, இரண்டு என்று மட்டை போடுவார் என்ற இமேஜ்தான் இப்போது உள்ளது.

    வலைப்பயிற்சியை ஆர்வமாகப் பார்க்கும் தோனி, ரெய்னா, சாகர்.


    ஆனால் இவற்றையெல்லாம் முறியடிக்கும் விதமாக அவர் நெட்டில் இறங்கி இறங்கி வந்து இறங்கி வந்து தூக்கித்தூக்கி மைதானத்தை விட்டு பந்தை அடித்த போது ஓகோ பழைய தல வந்துட்டார்றா என்று கூறுவது போல் தெரிகிறது. வீடியோவைப் பாருங்கள் நீங்களே தோனியின் பார்மைப் புரிந்து கொள்வீர்கள்.


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: