முகப்பு /செய்தி /விளையாட்டு / 5 டாட் பால்.. ஒரு சிங்கிள் - காட்டடி ரஸலை சம்பவம் செய்த முகமது சிராஜ்

5 டாட் பால்.. ஒரு சிங்கிள் - காட்டடி ரஸலை சம்பவம் செய்த முகமது சிராஜ்

முகமது சிராஜ், ரஸல்

முகமது சிராஜ், ரஸல்

மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 204 ரன்களை குவித்தது.

  • Last Updated :

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப்போட்டி தொடங்குவதற்கு முன்பு எல்லோரும் இதுவும் ஒரு லோ ஸ்கோரிங் கேமாத்தான் இருக்கப்போகிறது என எண்ணினார். மேட்ச் தொடங்கியதும் முதல் பவர்ப்ளே ஓவர்களில் இயான் மோர்கன் சுழற்பந்துவீச்சாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் கொண்டுவந்தார்.

வருண் சக்கரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரில் விராட் கோலி, பட்டிதார் இருவரும் அடுத்தடுத்து நடையைக் கட்டினார். பவர்ப்ளேவுக்கு பின்னர் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். இதனால் ரன்ரேட் உயர்ந்தது. இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தியை இயான் மோர்கன் பவர்ப்ளேயில் பயன்படுத்தவில்லை. வருண் சக்கரவர்த்தியை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சில விக்கெட்டுகள் கூட விழுந்திருக்கலாம். மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 204 ரன்களை குவித்தது.

இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா இன்னிங்ஸை சுப்மான் கில் அதிரடியுடன் தொடங்கினார். 9 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.ஆனால் அதன்பின் வந்த வீரர்கள் பெரிதாக ரன்வேட்டையில் ஈடுபடவில்லை. ஆட்டம் ஆர்.சி.பி பக்கம் திரும்பிக்கொண்டிருந்த வேலையில் ரஸல் வந்து அதிரடியில் மிரட்டினார். இதனால் ஆர்.சி.பி ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகினர். கொல்கத்தாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. சிக்ஸரும் பவுணடரியுமாக விளாசி வந்த ரஸல் 13 பந்துகளில் 30 ரன்களுடன் நல்ல ஃபார்மில் இருந்தார். முகமது சிராஜை, ரஸல் வைச்சு செய்யப்போகிறார் என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் சிராஜ் சம்பவம் செய்துவிட்டு போனார். முகமது சிராஜ் வீசிய 19-வது ஓவரில் கொல்கத்தாவின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. ரஸலுக்காக தனி வீயூகம் வகுத்தது போல் இருந்தது முகமது சிராஜ் பந்துவீச்சு.

முதல் இரண்டு ஓவர்களில் லைன் அண்ட் லென்தில் தடுமாறிய சிராஜ் 19-வது ஓவரை கச்சிதமாக வீசினார். நல்ல லைனில் வீசிய முதல் பந்தில் ரன் எதுவும் இல்லை. இதற்கு அடுத்து ரஸலுக்கு எதிராக தனது அஸ்திரத்தை எடுத்தார் சிராஜ். ஆஃப் சைடில் ஃபீல்டர்களை நிறுத்திவிட்டு வைட் யார்கர்களாக வீசினார். 2,3,4 பந்துகளில் வைட் யார்களாக தாக்கினார். இதில் ரஸல் தடுமாறினார். சிராஜ் ப்ளானை லேட்டாக உணர்ந்த ரஸல் இந்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட வேண்டும் என ஸ்டெம்ப் லைனில் இருந்து கொஞ்சம் விலகி வந்தார். இதனை உணர்ந்த சிராஜ் ஸ்லோ பவுன்சரை வீசினார்.

கடைசி பந்து புல்டாசாக வீச அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. முகமது சிராஜ் அந்த ஓவரில் ஒரு ரன்கள் மட்டுமே வந்தது. 20-வது ஓவரில் ரஸல் முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார். கொல்கத்தா அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

First published:

Tags: AB de Villiers, Cricket, Glenn Maxwell, IPL 2021, Mohammed siraj, RCB