பிப்ரவரியில் ஐபிஎல் மினி ஏலம்:  2021 தொடரை இந்தியாவிலேயே நடத்த முன்னுரிமை

ஐபிஎல் கோப்பை.

பிப்ரவரி 11ம் தேதி மினி ஏலம் நடைபெறலாம் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 • Share this:
  கோவிட்-19 இன்னும் முடிவுக்கு வராத நிலையிலும், வாக்சின் முயற்சிகள் இனிதான் தொடங்கப்படவுள்ள நிலையிலும் பணமழை ஐபிஎல் தொடரின் மினி ஏலம் பிப்ரவரி 2021-ல் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  செவ்வாயன்று ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது, இதில் 14ம் ஐபிஎல் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 21ம் தேதிக்குள் அணிகள் வீரர்களை விடுவிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  இதே கூட்டத்தில் பிப்ரவரி 11ம் தேதி மினி ஏலம் நடைபெறலாம் என்று உறுதி செய்யப்படாத தேதி ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் தான் ஐபிஎல் 2021 குறித்த பல முடிவுகள் உறுதி பெறும் என்று பிசிசிஐ தரப்பில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததால் கடும் விரக்தியடைந்த சூர்யகுமார் யாதவ், 37 வயதில் மீண்டும் ஆடும் ஸ்ரீசாந்த், சஞ்சு சாம்சன் ஆகியோரது ஆட்டம் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐபிஎல் தொடர் கடந்த முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது, இம்முறை இந்தியாவில் நடத்தவே முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அப்படி நடத்த அனுமதி கிடைக்கவில்லையெனில் மீண்டும் யுஏஇ-யில் நடத்த வாய்ப்புள்ளது
  Published by:Muthukumar
  First published: