முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2021 MI vs SRH| போட்டுக்கொடுத்தாலும் விட்டுக் கொடுக்காத சன் ரைசர்ஸ்- மும்பை ஆசை தகர்ப்பு

IPL 2021 MI vs SRH| போட்டுக்கொடுத்தாலும் விட்டுக் கொடுக்காத சன் ரைசர்ஸ்- மும்பை ஆசை தகர்ப்பு

பவுலிங்கில் போட்டுக்கொடுத்தாலும் விட்டுக்கொடுக்காத சன் ரைசர்ஸ்

பவுலிங்கில் போட்டுக்கொடுத்தாலும் விட்டுக்கொடுக்காத சன் ரைசர்ஸ்

171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மும்பை இண்டியன்ஸ் பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவை வெளியேற்றி தகுதி பெறும் என்ற நிலையில் சன் ரைசர்ஸ் பந்து வீச்சில் மும்பை இண்டியன்ஸ் அணிக்குப் போட்டுக்கொடுத்தாலும் ஆட்டத்தை விட்டுக்கொடுக்காதது ஓரளவுக்கு ஐபிஎல் நம்பகத்தன்மையை மீட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கேன் வில்லியம்சன், புவனேஷ்குமார் ‘காயம்’ என்று ஆடவில்லை என்பதும் சந்தேகத்தை தொடக்கத்தில் வலுக்கச் செய்தன. ஒருவேளை 171 ரன்கள் வித்தியாசம் என்பது 100 ரன்கள் வித்தியாசம் என்று இருந்திருந்தால் கவுண்டமணி சொல்வது போல் ஈயம் பூசினது மாதிரியும் ஈயம் பூசாதாது மாதிரியும் இருக்கணும்னு சன் ரைசர்ஸ் விட்டுக்கொடுத்திருக்கும். 235 ரன்களுக்கு எதிராக 65 ரன்களுக்குக் குறைவாக அதுவும் இந்தக் கட்டாந்தரை பிட்சில் சன் ரைசர்ஸ் ஆட்டமிழந்திருந்தால் நிச்சயம் ஐபிஎல் நம்பகத்தன்மை மீது பெரிய இடி விழுந்திருக்கும் நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை.

32 பந்துகளில் இஷான் கிஷன் 84 ரன்களையும் சூரியகுமார் 40 பந்துகளில் 82 ரன்களையும், அதாவது இவர்கள் இருவருமே 12 ஓவர்களில் 166 ரன்களை எடுக்கக்கூடிய பிட்சில், இருவரும் சேர்ந்து 24 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் விளாசக்கூடிய இந்த பிட்சில் சன் ரைசர்ஸ் அணி 65க்கும் கீழ் ஆல் அவுட் ஆகியிருந்தால் நிச்சயம் சந்தேகம் எழவே செய்யும்.

மாறாக சன் ரைசர்ஸ் பவர் ப்ளேயிலேயே 70 ரன்கள். சாவ்லா, கூல்டர் நைல், பும்ராவுக்கெல்லாம் அடி. 7 ஓவ்ர் 79, 8.3 ஓவர் 97 என்று சன் ரைசர்ஸ் சேசிங்கில் ஸ்பிரிட்டைக் காட்டியது. கேப்டன் மணீஷ் பாண்டே தன்னை உட்கார வைத்ததற்கெல்லாம் சேர்த்து வைத்து 41 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். கடைசியில் சன் ரைசர்ஸ் 193 ரன்கள் எடுத்தது.

ஆனால் விஷயம் இதுவல்ல, புவனேஷ்வர் குமார், கேன் வில்லியம்சன் உட்கார்ந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றால் இதுவரை ஒன்றுமே பேட்டிங் வராத இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் திடீரென பொங்கியதும் உஷ் கண்டுக்காதீங்க போல்தான் இருந்தது. இத்தனை நாட்கள் ஆடாத முகமது நபியை வைத்து பந்து வீச்சை தொடங்குகின்றனர். யாரால் நம்ப முடியும்? மேலும் பவர் ப்ளேயில் 5 பவுலர்களை யூஸ் செய்தார் மணீஷ் பாண்டே, இது என்ன? 6 ஓவர்களுக்கு 5 பவுலர்களையா பயன்படுத்துவார்கள்?

ஜேசன் ஹோல்டரை அடிக்கத் திணறி வரும் நிலையில் அவர் ஒரே ஓவரில் 22 ரன்களைக் கொடுக்கிறார் என்றால் நம்பவா முடியும்?உம்ரான் மாலிக்கிடம் இருந்த தீப்பொறி வேகம் எங்கே போயிற்று, ஒரு பந்து சூரியகுமார் யாதவை நிலைகுலையச் செய்தது தவிர. இஷான் கிஷன் விக்கெட் தவிர. சன் ரைசர்ஸின் பீல்டிங்கும் மும்பையை எப்படியாவது வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதாகவே நமக்குத் தெரிந்தது.

Also Read: தோனியிடமிருந்து ஏன் பெரிய ரன்களை எதிர்பார்க்க முடியாது?- ஓர் அலசல்

 Also Read: MI vs SRH | ஆறுதல் வெற்றி உடன் லீக் சுற்றுடன் வெளியேறியது நடப்பு சாம்பியன் மும்பை

ஆனால் முதல் பாதியில் பந்துவீச்சில் போட்டுக்கொடுத்த சன் ரைசர்ஸ் பிறகு சேசிங்கில் விட்டுக்கொடுக்காததுதான் நேற்றைய போட்டியின் ஆறுதல். கிரிக்கெட் ஆட்டம் அதன் போக்கிலேயே வணிக நலன்களை ஈர்ப்பதுதான், ஆனால் வணிக நலன்களுக்காக கிரிக்கெட்டை வளைப்பது ஆரோக்கியமல்ல. அப்படித்தான் சிஎஸ்கே வந்தது, ஏனெனில் கொல்கத்தாவின் பிரசித் கிருஷ்ணா அன்று ஜடேஜாவுக்குப் போட்டுக்கொடுத்தார். அப்படித்தான் மும்பையையும் கொண்டு வர பஞ்சாப் கிங்ஸ் முயன்றது, இதையெல்லாம் மீறியும் மும்பை வெளியேறியது என்றால் அதன் ஆட்டத்திறன் இந்த சீசனில் சரிப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு மற்ற அணிகளுக்கு வழிவிடுவதே சிறந்தது.

top videos

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    First published:

    Tags: IPL 2021